பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/89

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


85 களும் உள. அவற்றில் நமது தேசத்தில் பெரும் பகுதி உட்பட்டிருப்பதைப் பற்றி மிகவும் விசனப்படுகிறேன்: "ஓஹோ பெண்கள் தனியாக சஞ்சாரம் செய்ய இடங் கொடுத்தால் அண்டங்கள் கட்டாயம் இடிந்து போகும். ஒரு விதமான நியதியும் இருக்காது. மனுஷ்யர் மிருகப் பிராயமாய் விடுவார்கள்' என்று சில தமிழ்நாட்டு வைதிகர் நினைக்கலாம். அப்படி நினைப்பது சரியில்லை. ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் பெண்கள் இஷ்டப் படி எங்கு வேண்டுமானலும் போகலாமென்று வைத்திருக் கிருர்கள். அதனல் பூகம்பமொன்றும் நேர்ந்துவிடவில்லை. பூரீமதி அணிபெஸண்டை நம் ம வர் க ளி லே பலர் மிகவும் மரியாதையுடன் புகழ்ந்து பேசுகிருர்கள். அவரைப் போலே நமது ஸ்திரீகள் இருக்கலாமே என்ருல், நம்மவர் அடாதென்றுதான் சொல்லுவார்கள். காரணமென்ன? ஐரோப்பிய ஸ்திரீகளைக் காட்டிலும் நமது ஸ்திரீகள் இயற்கையிலேயே நம் பத் த கா த வ ர் க ள் என்று தாத்பர்யமா? மேலும் ஐரோப்பியரை திருஷ்டாந்தம் காட்டினல் நமக்கு ஸ்ரிப்படாது. நாம் ஆரியர்கள், திராவிடர்கள். அவர்களோ, கேவலம் ஐரோப்பியர்' என்று சொல்லிச் சிலர் தலையசைக்கலாம். சரி, இந்தியாவிலே மஹாராஷ்டிரத்தில் ஸ்திரீகள் யதேச்சையாகச் சஞ்சாரம் பண்ணலாம். தமிழ் நாட்டில் கூடாது. ஏன்? பெண்களுக்கு விடுதலை கொடுப்பதில் இன்னும் முக்கியமான-ஆரம்பப் படிகள் எவையென்ருல்: (1) பெண்களை ருதுவாகு முன்பு விவாகம் செய்து கொடுக்கக் கூடாது.