பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 நிலையைப் பார்க்கிருேம். பெண்களை இழிவு படுத்திலுைம் பாரதியார் நெருப்பாக மாறிவிடுவார். அதைப் பாஞ்சாலி சபதத்திலே திரெளபதியின் கூந்தலைப் பிடித்து இழுத்துக் கொண்டு செல்கிற அவல நிலையிலே பார்க்கிருேம். பாரதியார் தமது இலக்கியப் படைப்புகளிலே வீரம், பக்தி, சிருங்காரம் முதலிய நவரசங்களையும் கையாள்கின்ருர். பெரும் பாலும் இந்தச் சுவைகளே மிக அழுத்தமாக வருகின்றன. ஆனல் இதைத்தவிர நகைச்சுவை, கிண்டல், நையாண்டி, வஞ்சப் புகழ்ச்சி, எள்ளித் திருத்துதல் ஆகியவற்றையும் ஏற்ற இடங்களில் மிகப் பொருத்தமாகக் கையாள்வதை நாம் பார்க் கிருேம். இடிப்பள்ளிகூடத்து பிரம்மராய ஐயர் பிராயச்சித்தம், கடற்பாலத்திலே வர்ணுச்ரம சபை முதலிய கட்டுரைகளிலே தம் கருத்துக்களை பிறர்மேல் ஏற்றிச் சொல்வதும் உண்டு, பிராயச்சித்தம் என்ற கட்டுரையிலே, 'தள்ளுங்காணும்! பிராயச் சித்தமாவது, வெங்காயமாவது! நான் ஏதோ உதர நிமித்த மாக இந்த வைதிகத்தை விடமுடியாமல் கட்டுப்பட்டு கிடக்கிறேன். இதில் மற்றவர் வந்து சேர்வதிலே எனக்கு ஸ்ம்மதமில்லை' என்று வெளிப்படையாகச் சொல்லுகிரு.ர். இவ்வாறு வெளிப்படையாக 1920ம் ஆண்டுக்கு முன்னலே சொல்லுவதற்கு எவ்வளவு துணிச்சல் வேண்டும்! எவ்வளவு தீர்க்கதரிசனமும் வேண்டும்! இப்பொழுதெல்லாம் வெளிநாடு சென்று திரும்புகின்றவர் பிராய சித்தத்தை நினைப்பது கிடையாது. பாரதியார் ஆசார திருத்த மஹாசபையின்மேல் மிகவும் நம்பிக்கை வைத்திருந்தார். ஏனென்ருல் அரசியல் சீர்திருத் தங்கள் என்ருல் அதற்கு அன்னிய அரசாங்கத்தின் ஒப்புதல் வேண்டும். சமூக சீர்திருத்தம் செய்து கொள்ளுவதற்கு அவ்வாறு வேண்டியதில்லை. ஆனல் இங்கும் மேடையிலேறி சண்டப் பிரசண்டமாகப் பொழிந்து விட்டு, தமது வாழ்க்கையில் யாதொன்றையும் கடைப்பிடிக்காமல் இருப்பவர்களுக்கு ஓர்