பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/96

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


92 "எங்கப்பா பெயர் பார்த்தசாரதி அய்யங்கார்" என்று காந்தாமணி புல்லாங்குழலைப் போல் ஊதிச் சொன்னுள். கிழவி, போலீஸ் பார்த்தலாரதி அய்யங்காரை நோக்கி, ஒரு முறை உருட்டி விழித்தாள். போலீஸ் பார்த்தஸாரதி அய்யங்கார் கையுங் காலும் வெலவெலத்துப் போளுர். அவருக்கு முகமும் தலையும் வெள்ளை வெளேரென்று நரைத்துப் போய்த் தொண்ணுாறு வயதுக் கிழவனைப் போலே தோன்றினாலும், உடம்பு நல்ல கட்டுமஸ்துடைய தாகப் பதினெட்டு வயதுப் போர்ச் சேவகனுடைய உடம்பைப் போலிருக்கும். அவர் ஆண் புலி, வேட்டை களாடுவதில் தேர்ச்சியுடையவரென்று கேள்வி. பாம்பு நேரே பாய்ந்து வந்தால் பயப்பட மாட்டேனென்று அவரே என்னிடம் பத்துப் பதினைந்து தரம் சொல்லியிருக் கிரு.ர். அப்படிப்பட்ட சூராதி சூரனகிய பார்த்தஸாரதி அய்யங்கார், கேவலம் ஒரு பாட்டியின் விழிப்புக்கு முன்னே இங்ங்னம் கைகால் வெலவெலத்து மெய்வெயர்த்து முகம் பதறி நின்றதைக் கண்டு வியப்புற்றேன். அப்பால் அந்தப் பாட்டி காந்தாமணியிடம் மேற்படி போலீஸ் அய்யங்காரைச் சுட்டிக் காட்டி :- "இதோ நிற் கிருரே, இந்தப் பிராமணன், இவரா உங்கப்பா?” என்று கேட்டாள். அதற்குக் காந்தாமணி தன் இரண்டு கைக.ேயும் வானத்திலே போட்டு, முகத்திலே வானெளியை நகைக்கத் தக்க ஒளியுடைய நகை வீச, -'ஏ, ஏ, இவரல்லர்: இவர் கன்னங்கரேலென்று ஆசாரியைப் போலிருக்கிருரே! எங்கப்பா செக்கச்செவேலென்று எலுமிச்சம் பழத்தைப் போலிருப்பார். இவர் நரைத்த கிழவரன்ருே? எங்iப்பா சின்னப்பிள்ளை' என்று காந்தாமணி உரைத்தாள்.