பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f} } அப்போது போலீஸ் பார்த்தலாரதி அய்யங்கார் காந்தாமணியை நோக்கி :- "உங்கப்பாவுக்கு எந்த ஹரிலே வேலை?' என்று கேட்டார். "எங்கப்பா சங்கரநாதன் கோயில் ஸ்ப்-இன்ஸ்பெக் டர்" என்று காந்தாமணி சொன்னாள். பார்த்தஸாரதி அய்யங்கார் தலையைக் கவிழ்த்துக் கொண்டார். அவருக்கு ாஸ்ப்-இன்ஸ்பெக்டர்" என்ற பெயர் பாம்புக்கு இடி போல். அப்போது காந்தாமணிக்கும் பாட்டிக்குமிடையே பின்வரும் ஸ்ம்பாஷணை நிகழலாயிற்று. நீங்கள் அக்கா, தங்கை எத்தனை பேர்?' என்று பாட்டி கேட்டாள். அப்போது காந்தாமணி சொல் கிருள் :- "எங்கக்காவுக்குப் பதினெட்டு வயது. போன மாஸந்தான் திரட்சி நடந்தது; பூரீ வைகுண்டத்திலே. எனக்கு அடுத்த மாஸம் திரட்சி. என் தங்கை ஒரு பெண் திரள நிற்கிறது. நாங்கள் மூன்று பேரும் பெண்கள். எங்காப்பாவுக்குப் பிள்ளைக் குழந்தை இல்லையென்று தீராத மனக்கவலை. என்ன செய்யலாம்? பெருமாள் அநுக்ரஹம் பண்ணினலன்ருே தாழ்வில்லை? அதற்காக அவர் சோதிடம் பார்த்தார். எங்கம்மாவுக்கு இனிமேல் ஆண்குழந்தை பிறக்காதென்று பாழாகப் போவான் ஒரு ஜோதிடன் சொல்லிவிட்டான். அதை முத்திரையாக முடித்துக் கொண்டு இந்த அறுதலிப் பிராமணன், எங்கப்பா, அடுத்த மாஸம் மன்னர் கோவிலில் ஒரு பெண்ணை இளையாளாகக் கல்யாணம் பண்ணிக்கொள்ளப் போகிருர். முகூர்த்த மெல்லாம் வைத்தாய் விட்டது' என்ருள். "மன்னர் கோவிலில் உங்கப்பாவுக்குப் பெண் கொடுக்கப்போகிற மாமனருடைய பெயரென்ன?’ என்று அந்தப் பாட்டி கேட்டாள். அதற்குக் காந்தாமணி : - "அவர் பெயர் கோவிந்தராஜய்யங்காராம், அந்த ஊரிலே