பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/99

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


95 இவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருக்கிற சத்தம் என் காதில் விழுந்தது. என்னுடைய பார்வை முழுவதும் போலீஸ் பார்த்தஸிாரதி அய்யங்கார்மேல் நின்றது. அவரைப் பார்த்துக் கொண்டேயிருக்கையிலே என் மனதில் திடீரென்று ஒரு யோசனை பிறந்தது. அங்கிருந்தவர்களில் எனக்குக் கா ந் தா ம ணி யி ன் முகந்தான் புதிது . பார்த்தலாரதி ஐயங்காரையும் தெரியும். அந்தக் கிழவியையுந் தெரியும். அந்தக் கிழவி அய்யங்காரிச்சியில்லை; ஸ்மார்த்தச்சி. அந்த கிராம முன்சீபின் தங்கை. அவளுக்கும் போலீஸ் பார்த்தலாரதி அய்யங்காருக்கும் பால்யத்தில் பலமான காதல் நடைபெற்று வந்ததென்றும், அதனல் போலீஸ் பார்த்தலாரதி அய்யங்காருக்கும் மேற்படி கிராம முன்ளtiபுக்கும் பலமுறை யுத்தங்கள் நடந்தனவென்றும், அந்த யுத்தங்களிலே ஒன்றின்போதுதான் பார்த்தலாரதி அய்யங்காருக்கு ஒரு கண்ணில் பலமான காயம்பட்டு அது பொட்டையாய் விட்டதென்றும் நான் கேள்விப் பட்டதுண்டு. அந்தக் கேள்வியையும் மனதில் வைத்துக் கொண்டு இப்போது மேற்படி ஸ்திரீகளின் ஸ்ம்பாஷணையின் போது மேற்படி அய்யங்காரின் முகத்தில் தோன்றிய குறிப்புகளையும் கவனித்தவிடத்தே என் மனதில் பின்வரும் விஷயம் ஸ்பஷ்டமாயிற்று. கிழவியினிடத்தில் பழைய காதல் தனக்கு மாருமல் இன்றும் தழல் வீசிக்கொண்டிருக்கிறதென்ற செய்தியை ஐயங்கார் கிழவியினிடம் ஸ்திரப்படுத்திக் காட்ட விரும்புகிருரென்றும், காந்தாமணி முதலிய யுவதிகளின் அருகேகூடத் தனக்கு அக்கிழவியின் வடிவே அதிக ரம்ய மாகத் தோன்றுகிறதென்று உணர்த்த விரும்புகிரு ரென்றும். தெரியலாயிற்று. ஆல்ை அவருடைய முகக் குறிப்புகளிலே பாதி பொய் நடிப்பென்பதும் தெளிவாகப் லப்பட்டது.