பக்கம்:பாரதியார் குயிற்பாட்டு.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை 9 குயிலின் இசைப்பாட்டில் கவிஞன் காட்டியுள்ள கருத் அக்கள் உயர்ந்த தத்துவ உண்மைகளாகும். 'காதல் போயிற் சாதல், அருளொளி அவியுமாயின் இருள், இன்பத் திற்கு எல்லே கண்டால் அது துன்பம், நாதத்திற்கு கலி வேற்பட்டால் சேதம், தாளத்திற்குத் தடையுண்டானல் இசை ஒரு கூளம், பண்ணிற்குப் பழுதுண்டாயின் அது மண் புகழுக்குப் புசையுண்டாயின் இகழ், உறுதிக்கு உடை வுண்டாயின் இறுதி, கூடிய குமரன் பிரிந்தால் குலேவுதரும் வாட்டம், இசை தரும் குழல் உடைந்தால் அது வீணே !” இவ்வாறு ஒன்றைப் பற்றி ஒன்று நிற்றலே வாழ்வில் இன்பங் தருவது; பிரிவு பெருந்துன்பத்தை விளப்பது' என்னும் உண்மையை வலியுறுத்தி கிற்பதாகக் குயிலின் பாட்டு அமைந்திருப்பது கொள்ளேயின்பம் விளேப்பதாகும். குயில் தனது காதற் கதையை ஒதத் தொடங்கி, அஃது இயற்கை இசை வெள்ளத்தில் உள்ளத்தைப் பறி கொடுத்த திறத்தை விளக்குவது வியத்தற்குரியது. பறவைகளின் ஒலி, மரங்களிடையே காற்றெழுப்பும் ஒசை, ஆற்றுவெள்ளத்தில் எழும் அரிய ஓசை, அருவியின் இனிய ஒலி, நீலக்கடலில் அலேகள் இடையருது எழுப்பும் ஒசை, மங்கையர் பாடும் பண்ணமைந்த கீத நாதம், ஏற்றப்பாட்டு, வள்ளேப்பாட்டுக்களின் தெள்ளமுத ஓசை, சுண்ணம் இடிப்பாரின் வண்ண இசை, பள்ளர் பாடும் பண்ணமைந்த பள்ளுப்பாட்டின் ஒசை, கும்மிப் பாடலின் குளிர்ந்த இசை, குழலிசை, வீணையின் நாதம் இவற்றையெல்லாம் அனுப வித்த கலத்தைக் குயில் எடுத்துரைக்கின்றது. குயில் தனது பழம்பிறப்பின் வரலாறு பற்றிப் பொதிய மலேக்கண் வாழ்ந்த முனியுங்கவரை வழிபட்டு அறிந்த வாற்றை மொழிக் துருகும் திறம் படித்து இன்புறற்குரியது. கவிஞர் அக்குயிலின் பாற் கொண்ட ஐயத்தை யெல்லாம் அகற்றுமாறு திறம்படவும் கயம்படவும் எடுத்துரைக் கின்றது. - கு. பா.--2