பக்கம்:பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£x ஸங்கீத வித்வான்கள், கைதேர்ந்த சிற்பர், பலநூல் வல்லார், பல தொழில் வல்லார், பல மணிகள் தோன்றுகிறர்கள். அச்சமில்லாத தர்மிஷ்டர் பெருகு கின்றனர். உனது ஜாதியிலே தேவர்கள் மனிதர் களாக அவதரிக்கிரு.ர்கள். கண்ணே நன்ருகத் துடைத்துவிட்டு நான்கு பக்கங்களிலும் பார். ஒரு நிலைக்கண்ணுடியிலே போய்ப் பார்.” மனத்திலே உண்மையான ஆழ்ந்த உணர்ச்சி இருக்க வேண்டும். தெளிவு இருக்கவேண்டும். அவ்வாறிருந் தால், தெளிந்த நடையிலே, எளிமையான முறையிலே அதை வெளியிடத் தோன்றும். 'எளிய நடையைக் கண்டு நான் பயப்படவில்லை. அதை நான் தாழ்வாகவும் கருத வில்லை. எண்ணத்திலே கருத்திலே எனக்குத் தெளிவிருக் கிறது. அதனால் எல்லோருக்கும் புரியும்படியாக நான் எழுதத் தயங்குவதில்லை" என்று ஒர் ஆங்கில அறிஞர் எழுதுகிரு.ர். பாரதியாரின் வசன நடையிலே இந்த ஆழ்ந்த உணர்ச்சியையும் தெளிவையும் காணலாம். "தமிழ் என்னும் கட்டுரையிலே பாரதியார் எழுது வதைப் பாருங்கள்: 'உலகத்திலுள்ள ஜாதியார்களிலே ஹிந்து ஜாதி அறிவுத் திறமையிலே மேம்பட்டது. இந்த ஹிந்து ஜாதிக்குத் தமிழராகிய நாம் சிகரம்போல் விளங்கு கிருேம். எனக்கு நாலைந்து பாஷைகளிலே பழக்கம் உண்டு. இவற்றிலே தமிழைப்போல வலிமையும் திறமையும் உள்ளத் தொடர்பும் உடைய பாஷை வேறு ஒன்றுமேயில்லை. இந்த நிமிஷம் தமிழ் ஜாதியின் அறிவு, கீர்த்தி வெளியுலகத்திலே பரவாமல் இருப்பதை நான் அறிவேன். போன நிமிஷம் தமிழ் ஜாதியின்