பக்கம்:பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

家谱 உடலை எவ்வளவு லாகவத்துடன் சுமந்து செல் கின்றது. இந்தக் குருவிக்கு எப்போதேனும் தலைநோவு வருவதுண்டோ? ஏது, எனக்குத் தோன்றவில்லை. ஒரு முறையேனும் தலைநோவை அனுபவித்த முகத்திலே இத்தனை தெளிவு இருக்க நியாயமில்லை...... 'தெய்வமே, எனக்கு இரண்டு சிறகுகள் கொடுக்க மாட்டாயா? நான் இச்சைப்படி வானத்திலே பறந்து செல்ல மாட்டேன? ஆஹா எத்தனை தேசங்கள் பார்க்கலாம்! எத்தனை நாடுகள், எத்தனை பூக்கள்! எத்தனை மலைகள், எத்தனை சுனைகள், எத்தனை அருவி கள், எத்தனை நதிகள், எத்தனை கடல்வெளிகள்!” நம் உள்ளத்திலே பதிகின்ற வாக்கியங்கள் அல்லவா இவை: பேசுவது போலவே அமைந்த நடை. அவருடைய கதைகளிலும் கட்டுரைகளிலும் இந்தச் சிறப்பை எங்கும் காணலாம். உள்ளத்தில் ஒளியுண்டானல் வாக்கினிலே ஒளியுண்டாகும் என்று அவர் பாடியதற்கு அவருடைய எழுத்துகளே தக்கச் சான்ருகும். "ஞானரதம்' என்ற நூல் இம்மாதிரியான உரை நடைக்கு ஒரு தனி இலக்கணமாக அமைந்திருக்கிறது. இந்நூலின் பெருமையைப்பற்றிப் பல ஆண்டுகளுக்கு முன்பே அமிர்தகுணபோதினி என்னும் பத்திரிகையில் எஸ். ஜி. ராமாநுஜலு நாயுடு எழுதியிருப்பதாவது : 'ஞானரதம் என்ற தலைப்பெயருடன் தமிழ்நாடு என்றும், கண்டிராத துள்ளிக்குதிக்கும் ஒரு புதிய கந்தர்வ நடையில், இயற்கையின் அழகுகளைப்பற்றியும் நெருங்கிய நண்பர்களின் மனமாறுபாடுகளைப்பற்றியும் அற்புதமான கற்பனையுடன் வாரந்தோறும் இந்தியா’வில் எழுதி வந்தார். அவற்றை ஒருங்குசேர்த்து ஞானரதம் என்ற