பக்கம்:பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xiii கொண்டே அழகான நடை எழுதிவிடலாம் என்று சிலர் நினைக்கிருர்கள். அது தவறு. அப்படி எழுத முடிந்தாலும் அது உயிரில்லாத உடம்புக்கு அணிகளைப் பூட்டுவது போலத்தான் இருக்கும். அதிலே உயிரிருக்காது. மேலே கூறிய உணர்ச்சி முதலியவைகள் இருந்தாலே போதும். நடை தானகவே அமைந்துவிடும் என்று வேறு சிலர் கருதுகிரு.ர்கள். எண்ணத் தெளிவிருக்கும்போது அதை நன்கு மனத்தில் பதியும்படி கூறும் வன்மை எளிதாக அமைகிறதென்ருலும், அந்த வன்மையைக் கலைத் திறமையாலும் பயிற்சியாலும் பெருக்கும்போதுதான் மிகச்சிறந்த நடை தோன்றுகிறது. பாரதியாரிடத்திலே இந்தக் கலைத்திறமையையும் காணலாம். நேருக்கு நேராகப் பேசுவதுபோலப் பின்னல் களில்லாமல் உணர்ச்சிகளை அனைவரும் புரிந்துகொள்ளும் படியாக எழுதவேண்டும் என்ற நிச்சயத்தின்பேரில் இந்தத் திறமை உருவாகியிருக்கிறது. ஓர் உதாரணம் : 'உன்னுடைய ஆன்மாவும் உலகத்தினுடைய ஆன்மாவும் ஒன்று. நீ, நான், முதலே, ஆமை, ஈ, கருடன், கழுதை எல்லாம் ஒரே உயிர். அந்த உயிரே தெய்வம். ஒன்றுகூடிக் கடவுளை வணங்கப் போகுமிடத்து மனிதரின் மனங்கள் ஒருமைப்பட்டுத் தமக்குள் இருக்கும் ஆத்மவொருமையை அவர்கள் தெரிந்து கொள்ள இடமுண்டாகுமென்று கருதி முன்னேர் கோவில் வகுத்தார்கள். ஊரொற்றுமை கே வி லா ல் நிறைவேறும். வீட்டுக்குள் தனியாகச் சிலை வைத்துக் கும்பிடுவது குடும்ப ஒருமை உண்டாகும்பொருட்டாக,