பக்கம்:பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Xህ திருகினலும் எழுந்திருக்காது. வசன நடை, கம்பரி கவிதைக்குச் சொல்லியது போவே, தெளிவு, ஒளி, தண்மை, ஒழுக்கம் இவை நான்குமுடையதாக இருக்க வேண்டும். இவற்றுள், ஒழுக்கமாவது, தட்டுத் தடை யில்லாமல் நேராகப் பாய்ந்து செல்லும் தன்மை." நடை ஆற்ருெழுக்காகச் செல்லவேண்டும் என்பதற்குப் பாரதியாரின் உரைநடையே நல்ல எடுத்துக்காட்டாகும். இந்த ஆற்ருெழுக்கோடு பல கட்டுரைகளில் நகைச்சுவை யும் குமிழிட்டெழுவதை நாம் காணலாம். பெண்’ என்ற கட்டுரையிலே பிரமராய வாத்தியாரின் கர்ஜனையைப்பற்றிப் பாரதியார் எழுதுகிருர் : "இவர் இந்தத் தெருவில் வார்த்தை சொன்னல் மூன்ருவது தெருவுக்குக் கேட்கும். பகலில் பள்ளிக் கூடத்து வேலை முடிந்தவுடனே வீட்டுக்கு வந்து, ஸாயங்காலம் ஆறு மணி முதல் எட்டு மணி வரை தன் வீட்டுத் திண்ணையில் சிநேகிதர்களுடன் பேசிக் கொண்டு, அதாவது கர்ஜனை செய்து கொண்டிருப் பார். பிறகு சாப்பிடப் போவார். சாப்பிட்டுக் கை அலம்பி, கை ஈரம் உலர்வதற்கு முன்பு, மறுபடி திண்ணைக்கு வந்து சப்தம் போடத் தொடங்கி விடுவார். இவருடைய வீட்டுத் திண்ணைக்கு அக்கம் பக்கத்தார் இடிப் பள்ளிக்கூடம் என்று பெயர் வைத்திருக்கிருர்கள். இந்த இடிப்பள்ளிக்கூடத்திற்கு வந்து மாலைதோறும் நாலைந்து பேருக்குக் குறை யாமல் இவருடைய பேச்சைக் கேட்டுக் கொண்டிருப் பார்கள். அந்த நாலைந்து பேருக்கும் இன்னும் காது செவிடாகாமல் இருக்கும் விஷயம் அநேகருக்கு ஆச்சர்யத்தை உண்டாக்குகிறது."