பக்கம்:பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5.Wi அதே கட்டுரையில் பர்தா வழக்கத்தைப்பற்றி அவர் வேடிக்கையாகக் குறிப்பிடுகிருர் : 'துருக்கி தேசம் தெரியுமா? அங்கே நேற்றுவரை ஸ்திரிகளை மூடிவைத்திருப்பது வழக்கம். கஸ்தூரி மாத்திரைகளை டப்பியில் போட்டு வைத்திருக்கிருர் களோ இல்லியோ, அந்த மாதிரி; திறந்தால் வாசனை போய்விடும் என்று." இவ்வாறு நகைச்சுவை ஆங்காங்கு மிளிர்வதை அவருடைய கட்டுரைகளிலும் கதைகளிலும் காணலாம். ஞானரதத்திலேயும் சிறந்த நகைச்சுவைப் பகுதிகள் இருக் கின்றன. ஏதாவது ஒரு விஷயத்தை அழுத்தமாகச் சொல்ல வேண்டுமானல் பாரதியார் அதற்கு வெகு திறமையோடு வசனத்தைக் கையாளுகிரு.ர். 'கண்கள் என்ற கட்டுரையில் பாரதியார் கூறுகிருர் : 'பொய் இல்லாவிட்டால் பார்வை நேராகும். கவனி! பொய் தீர்ந்தால் நேரே பார்க்கலாம். பயம்-தீர்ந்தால் நேரே பார்க்கலாம். கவனி! பொய் தீர்ந்தால் பயம் தீரும். பயம் தீர்ந்தால் பொய் தீரும். நேரே பார்த்தால் விரோதக் குறியென்று யோக்யன் ஏன் நினைக்கவேணும்? அகத்தின் அழகு முகத்தில் தெரியும். உன் மனசில் என்ன இருக்கிறதென்று தெரிந்துகொள்ளும்