பக்கம்:பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xvii பொருட்டாக உன் கண்ணை நேரே பார்க்கிறேன். விரோத மில்லை. அவமரியாதை இல்லை, விஷயம் தெரிந்து கொள்ளும்பொருட்டு.” மேலும் பகவத் கீதை முன்னுரையில், பாரதியார் எழுதுவதையும் ஆராய்ந்து பாருங்கள்: 'பற்று நீக்கித் தொழில் செய்; பற்று நீக்கி; பற்று நீக்கி; பற்று நீக்கி-இதுதான் முக்கியமான பாடம். தொழில்தான் நீ செய்து தீரவேண்டியதாயிற்றே! நீ விரும்பினலும் விரும்பாவிடினும் இயற்கை உன்னை வற்புறுத்தித் தொழிலில் மூட்டுவதாயிற்றே! எனவே அதை மீட்டும் மீட்டும் சொல்வது கீதையின் முக்கிய நோக்கமன்று. தொழிலின் வலைகளில் மாட்டிக்கொள்ளாதே. அவற்ருல் இடர்ப்படாதே. அவற்ருல் பந்தப்படாதே, தளைப்படாதே-இதுதான் முக்கியமான உபதேசம். எல்லாவிதமான பற்றுக்களை யும் களைந்துவிட்டு, மனச்சோர்வுக்கும், கவலைக்கும், கலக்கத்திற்கும், பயத்துக்கும் இவையனைத்திலும் கொடியதாகிய ஐயத்துக்கும் இடங்கொடாதிரு' பாரதியார் பல சுவையான கதைகள் எழுதியுள்ளார். வேடிக்கைக் கதைகள் என்றே சிலவற்றை நகைச் சுவையோடு படைத்திருப்பதையும் காணலாம். அந்தக் கதைகளின் உரைநடைக்காகவே அவற்றைப் போற்றிப் படிக்கலாம். 'காந்தாமணி’ என்னும் கதை தொடங்குவதைப் பாருங்கள் : காந்தாமணி, உங்கப்பா பெயரென்ன?' என்று பாட்டி கேட்டாள். ஒரு கிணற்றங்கரையில் நடந்த