பக்கம்:பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xviii ஸங்கதி. கோடைக்காலக் காலை வேளை. வானத்திலே பால ஸஅர்யன் கிரணங்களை ஒழிவில்லாமல் பொழிந்து விளையாடுகிருன். எதிரே நீல மலை; பச்சை மரங்கள்; பசுக்கள்; பல மனிதர்கள்; சில கழுதைகள்; இவற்றின் தொகுதி நின்றது...... "மன்னர்கோவிலிலே உங்கப்பாவுக்குப் பெண் கொடுக்கப்போற மாமனருடைய பெயரென்ன?” என்று அந்தப் பாட்டி கேட்டாள். அதற்குக் காந்தாமணி 'அவர் பெயர் கோவிந்தராஜய்யங் காராம். அந்த ஊரிலே அவர் பெரிய மிராசாம். அவருக்கு ஒரே பெண்தானம். கால் முதல் தலைவரை வயிர நகை,சொரிந்து கிடக்கிறதாம். தேவ ரம்பை போல் அழகாம் அந்தப் பெண்” என்ருள்... "மன்னர்குடிப் பெண் திரண்டு மூன்று வருஷமாய் விட்டதாக இந்த ஊரிலேகூட பலமான ப்ரஸ்தாபம். ஆண்பெண் எல்லோரும் ஒரே வாக்காகச் சொல்லு கிரு.ர்கள்” என்ருள் அவர் மனைவி. அப்பா அதற்கு "நெவர் மைண்ட். அந்தக் குட்டி திரண்டிருப்பதைப்பற்றி நமக்கு ரட்டை ஸ்ந்தோஷம். நமக்குப் பணம் கிடைக்கும். ஆண் பிள்ளை பிறக்கும். குட்டி ஏராளமான அழகு. இந்த மாதிரி இடத்திலே ஐடோன் கேர், எடேம் எபெளட் சாஸ்த்ரங்கள், நாம் நம் சாஸ்த்ரங்களைப் புல்லாக மதிக்கிருேம் என்ருர் என்று காந்தாமணி சொன்னள். ஆங்கிலத்தைத் தமிழில் இடையிடையே புகுத்தி எழுதுவதற்குப் பாரதியாரே முன்னேடியாக இருக்கிருர். தமிழைப்போல வலிமையும் உள்ளத் தொடர்பு முடைய பாஷை வேருென்றுமில்லை என்று பாரதியாரே