பக்கம்:பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xix கூறியதற்கு எடுத்துக்காட்டாக அவருடைய கட்டுரை களில் ஒன்றிலிருந்து ஒரு பகுதியை இங்கே தருகிறேன். பாரதியார், "எனது ஈரோடு யாத்திரை’ என்று ஒரு சுவையான கட்டுரை எழுதியிருக்கிரு.ர். அதில் அவர் தமது அனுபவத்தைக் கூறுகிருர் : 'ஈரோட்டுக்குப் போய்ச் சேர்ந்தேன். அது கொங்குநாடு. அதற்கும் தென்பாண்டி நாட்டிற்கும் யாதொரு வேற்றுமையும் தென்படவில்லை...... கட்டைவண்டி ஒன்று கிடைத்தது. கட்டை வண்டியில் ஒரு மனிதன் நிமிர்ந்து உட்கார இடமில்லை. ஒன்றரை அடி நீளம். மாடு ஒரு பூனைக்குட்டி போன்று இருந்தது. நான் ஒன்று: வண்டிக்குடையவன் இரண்டு; அவனுக்குக் கீழே கூலிக்கு வண்டி ஒட்டும் சிறுவன் ஒருவன்; எங்கள் மூவரையும் மூன்று பர்வதங்களாக நினைத்து அந்த மாட்டுப்பூனே இழுத்துக்கொண்டு போயிற்று. போய்ச் சேரு முன்னே மாடு வெயர்த்துப் போய் விட்டது. அதன் மேலே குற்றஞ் சொல்வதில் பயனில்லை. அது சிறு ஜந்து. அதன் மேலே நாங்கள் மூன்று தடிமனிதரும் ஒரு கழுத்தளவுக்குச் செய்யப் பட்ட விதானத்தையுடைய வண்டியும் சவாரி பண்ணுகிருேம்.” பாரதியார் உரைநடையிலே பலவகையான விஷயங் களைப்பற்றி எழுதியுள்ளார். சுவைத்து அனுபவிக்கக் கூடிய கதைகள், கட்டுரைகள், அரசியல் துணுக்குகள், கேலியும் கிண்டலும் உள்ள வாசகங்கள் மிகப்பல