பக்கம்:பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியார்-வசன கவிதை மகான் அரவிந்த கோஷ் தம்மை யாரும் தொந்தரவு செய்யாமலிருக்கப் பாண்டிச்சேரியை 1914-ல் வந்தடைந் தார். பாரதியார் அதற்குச் சற்று முன்னதாகவே பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து தப்பி மீண்டும் நாட்டிற்குத் தொண்டு புரிவதையே நோக்கமாகக் கொண்டு, அப்பொழுது பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்த பாண்டிச்சேரியில் தஞ்சம் புகுகின்ருர். இந்த நிகழ்ச்சி 1908, அக்டோபர் வாக்கில் நடைபெற்றது. பாரதியாருடைய நண்பர்கள் எல்லாம் கூடி இந்த முடிவு எடுத்ததாகவே தெரிகின்றது. ஏனெனில், மண்டையம் பூரீனிவாசாச்சாரியாரும் அங்குப் போய்க் சேர்ந்தார். அச்சு இயந்திரங்களும் போய்ச் சேர்ந்தன. அக்டோபர் 20-ந் தேதியிலே பாண்டிச்சேரியில் இந்தியா வழக்கம் போல வெளியானதென்ருல் எவ்வளவு திட்ட மிட்டுக் காரியங்கள் தொடங்கியிருப்பார்கள் என்பதை யூகித்துக்கொள்ளலாம். மகான் அரவிந்தர் 1910-ம் ஆண்டு ஏப்ரல் 4-ந் தேதி மாலை 4 மணிக்குப் பாரதியாரைப் பின்பற்றி அங்கு சேர்ந்தார். அரவிந்தர் முதலில் சந்திரநாகூருக்குச் சென்ருர், அங்கிருந்து அவர் கேட்ட குரலின் டடி 1910