பக்கம்:பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 வசன நடை போலேதான் இருக்கும். எதுகை, மோனே, தளே ஒன்றுமே கிடையாது. எதுகை மோனை இல்லாத கவிதைதான், உலகத்திலே பெரிய பாஷைகளில் பெரும் பகுதியாகும். ஆனல் தளையும் சந்தமும் இல்லாத கவிதை வழக்கமில்லை. வால்ட் விட்மான், கவிதையைப் பொருளில் காட்டவேண்டுமே யல்லாது சொல்லடுக்கில் காட்டுவது பிரயோஜனமில்லையென்று கருதி, ஆழ்ந்த ஒசை மாத்திரம் உடையதாய் மற்றப்படி வசனமாகவே எழுதி விட்டார். இவரை ஐரோப்பியர் காளிதாஸன், கம்பன், ஷேக்ஸ்பியர், மில்டன், தான்தே, கெத்தே முதலிய மகா கவிகளுக்கு ஸ்மான பதவியுடையவராக மதிக்கிருர்கள். குடியாட்சி, ஜனதிகாரம் என்ற கொள்கைக்கு மந்திர ரிஷிகளில் ஒருவராக இந்த வால்ட் விட்மான ஐரோப்பிய ஜாதியார் நினைக்கிருர்கள்." ‘ழரீரவீந்தர திக்விஜயம் என்ற கட்டுரையில் (25-8-1921) பாரதியார் எழுதியுள்ள புகழ்ச்சி உரையை நாம் என்ன என்று சொல்வது! பாரதியார் கூறுகின்ருர்: "கீர்த்தியடைந்தால், மஹான் ரவீந்தரரைப் போலே அடையவேண்டும். வங்காளத்தில் மாத்திரமா? இந்தியா முழுமையுமா? ஆசியா முழுதுமா? ஜெர்மனி, ஆஸ்த்ரியா, பிரான்ஸ் பூமண்டல முழுமையும் பரவின கீர்த்தி. இத்தனைக்கும் அவர் பாடிய பாட்டுகளோ, வங்க பாஷை யிலே உள்ளன. வெறும் மொழி பெயர்ப்புக்களைத்தான் உலகம் பார்த்திருக்கிறது. அதற்குத்தான் இந்தக் கீர்த்தி." பாரதியார் உதயசூரிய நாடாகிய ஜப்பானுக்கே சென்று, அங்கு கவிதை எவ்வாறு வளம் பெற்று இருக்கிறது என்பதையும் ஆராயாமல் விட்டுவிடவில்லை. பாரதியார் எழுதுகிருர்: