பக்கம்:பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 யிலே வர்ணனை செய்துதான் இருக்கிரு.ர்கள். இதிலே புதுமை யொன்றுமில்லை. வலிமைக் கருவிகள் இப்போது சில புதுமையாகத் தோன்றியிருக்கின்றன. இவற்றை ஐரோப்பியக் கவிகள் விலக்கிவைத்தது பிழை. ஆனால், பழைய தெய்வத்தையும், இயற்கையையும் மறந்து யந்திரங்களைப் பாடத் தொடங்கினல் கவிதை செத்துப் போய்விடும்.' பாரதியார் எவ்வாறு புதுப்புது யாப்பு வகைகளைக் கொண்ட உணர்ச்சிக்கு முக்கிய இடம்தந்து உருவாக்கினர் என்று இப்பொழுது விளங்குகிறதல்லவா? அவர் மகான் அரவிந்தர் ஆதரவு பெற்றுப் பல வசன கவிதைகளையும் உண்டாக்கியிருக்கிரு.ர். வசன கவிதையை இப்பொழுது புதுக் கவிதை என்றும், பழைய யாப்பு வகைகளில் அமைந்த செய்யுளை மரபுக் கவிதை என்றும் அழைக் கிருேம். யாப்பு முதலிய விதிகளுக்குக் கட்டுப்படாமல் அரவ வனப்பு ஒன்றையே முக்கியமாகக் கொண்டு இந்தப் புதுக் கவிதைகள் உண்டாகி இருக்கின்றன. இவை உருவகம், குறியீடு முதலியவற்ருல் அணி செய்யப்பெற்று விளங்கும்போது, மேலும் மேலும் சிறப்பாக அமைந்து விடும். 'ஞாயிறு பற்றிப் பாரதியார் எழுதிய புதுக் கவிதையை இப்பொழுது காண்போம். ஞாயிறே. இருளை என்ன செய்துவிட்டாய்? ஒட்டியைா? கொன்ருயா? விழுங்கிவிட்டாயா? கட்டிமுத்தமிட்டு நின் கதிர்களாகிய கைகளால் மறைத்து விட்டாயா? இருள் நினக்குப் பகையா? இருள் நின் உணவுப் பொருளா? அது நின் காதலியா?