பக்கம்:பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 சூரியன், தான் ஏறமுடியாத அளவிற்கு அந்த மதில்சுவர் உயர்ந்திருப்பதால் கோட்டை வாயில்கள் திறக்கும் சமயம் பார்த்திருப்பானும்!” 'ஒற்றை ஆழியாம் தேரவன் உயர்மதில் கடக்கப் பெற்றி லாமையால் பிறங்கு பொற் கதவங்கள் திறக்கும் அற்றம் நோக்குவன்." என்று இப்படியாக, மிகமிக உயர்வு நவிற்சி அணியில் இருக்கும். அது தேசபக்தியை வளர்க்காது. 'வந்தே மாதரம் என்போம்-எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம் ஜாதி மதங்களைப் பாரோம்-உயர் ஜன்மம்.இத் தேசத்தில் எய்தின ராயின் வேதிய ராயினும் ஒன்றே-அன்றி வேறு குலத்தின ராயினும் ஒன்றே.' என்று, இப்படிப்பட்ட தேசபக்திக்கு உயிர் கொடுக்கும் பாடல்களே பாரதியாரது நோக்கமாகும். 'எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி’ என்ற பாடலையும், 'மன்னும் இமயமலை எங்கள் மலையே' என்ற பாடலையும் அழகாக எழுதிப் பல பத்திரிகைகளுக்கு அனுப்பினர். இருந்தாலும், அந்த மூன்று பாடல்களையும் ஒரு சிறு நூல் வடிவம் ஆக்கி, மேலும் பல தமிழர்களுக்குப் பயன்படுமாறு செய்ய ஆசைகொண்டார். கையிலே காசு இல்லே, என்ன செய்வது என்று தம் நண்பரான G. A. நடேசனிடம் தெரிவித்தார். 'உங்களுடைய விருப்பம் நிறைவேற வேண்டும் மால்ை அதற்கு உதவக்கூடியவர் திரு. V. கிருஷ்ண சுவாமி ஐயரே ஆவார்கள். அவரிடம் வேண்டுமானல் அழைத்துச் செல்லுகிறேன்” என்ருர் திரு. நடேசன்.