பக்கம்:பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 'இந்த நூறு ரூபாயை வைத்துக்கொண்டு புத்தகம் வெளியிட்டு இலவசமாக வழங்குவீர்' என்று ஒரு நூறு ரூபாய் நோட்டை வழங்கினராம். அன்று பாரதியார் பாடிய மூன்று பாடல்களையும் அச்சிட்டுப் பள்ளிக்கூடங்களுக்கும், பொது நிறுவனங் களுக்கும் இ ல வ ச மா. க அனுப்பி வைத்தாராம் திரு. V. கிருஷ்ணசாமி ஐயர். இந்த விவரங்களைத் தந்துள்ள திரு. கி. சந்திரசேகரன் தமது தந்தையாரின் வாழ்க்கைச் சரிதையில் தெரிவித்து இருக்கிரு.ர். தேசபக்திப் பாடல்களே இ ல் லை என்றிருந்த குறைபாட்டை நீக்கி, தேசபக்திப் பாடல்கள் சிலவற்றை ஈடும் இணையும் அற்ற வகையில் படைத்துள்ளார் பாரதியார். 'பாரத சமுதாயம் வாழ்கவே”, “எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி', 'அச்சமில்லை அச்சமில்லை அச்ச மென்பதில்லையே', 'ஜெயபேரிகை கொட்டடா", "ஜெயம் உண்டு பயம் இல்லை மன்மே', 'என்று தணியும் இந்த சுதந்திர தாகம்', 'வந்தேமாதரம் என்போம்', 'சொந்த நாட்டில் பிறர்க்கடிமை செய்தே துஞ்சிடோம் இனி அஞ்சிடோம்', 'ஓம்சக்தி ஒம்சக்தி ஓம்’ என்பன போன்ற பாடல்கள் அட்சரலகூம் பெறுபவையாகும். 'பாருக்குள்ளே நல்ல நாடு', 'மன்னும் இமயமலை எங்கள் மலையே', 'செந்தமிழ் நாடென்னும் போதினிலே’ என்பன போன்றபாடல்கள் சற்றும் உயர்வு நவிற்சி இன்றித் தேசத்தையும் செந்தமிழ் நாட்டையும் அவற்றின் பெருமையையும் உள்ளம் குளிர உணர்த்துவனவாகும். 'நெஞ்சு பொறுக்குதிலேயே-இந்த நிெைகட்ட மனிதரை நினைந்துவிட்டால்' 2