பக்கம்:பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 உலகமே வியக்கும் வண்ணம் காந்தியடிகளின் தலைமையில் பீரங்கி முழக்கத்தையும் பொருட்படுத்தாது விடுதலைப் போர் புரிந்து வெற்றி பெற்றனர் அஹிம்சா வீரர்கள். 'ஜயமுண்டு பயமில்லை ம ன ேம', 'ஜயபேரிகை கொட்டடா', 'அச்சம் தவிர், ஆண்மை தவறேல், இளைத்தல் இகழ்ச்சி' என்ற பல இடங்களிலும் பயத்தைப் போக்குவதுதான் தமது முக்கியமான வேலை என்று கருதுகிருர், நமது மகாகவி. பாரதியார், திலகர் போன்ற உத்தமத் தலைவர்களைப் போற்றுகின்ருர். எங்கெல்லாம் வீரம் கரை புரண்டு ஒடுகின்றதோ அவற்றைப் பாராட்டுகின்ருர். இத்தாலிய நாட்டு வீரரான மாஜினியின் வீரத்தைப் புகழ்கிரு.ர். அவர் ஆணையினை மெய்சிலிர்க்கும் வீர நடையில் கூறிப் புகழ் கின்ருர். நம் நாட்டைச் சார்ந்த குரு கோவிந்தசிங் என்பவர், உலகோர் அதிசயிக்கும்படி, தம் சீடர்களுக்கு ஊட்டிய வீரத்தினைப் புகழ்ந்து வேருெரு பாடலில் கூறு கின்ருர், பிஜித் தீவிலே, கரும்புத் தோட்டத்திலே நடை பெற்றுக்கொண்டிருந்த அநீதிகளையும் கொடுமைகளையும் அறிந்து மனம் உருகிப் பாடுகின்ருர், மற்ருெரு பாடலில். இந்தப் பாடல்களேயெல்லாம் கேட்கும்போது பிரிட்டிஷ் ஆட்சியின்மேல் எவரும் வெறுப்புக்கொள்ளாமல் இருக்க முடியாது. எவ்வகையிலேனும் பிரிட்டிஷ் ஆட்சியின்மேல் வெறுப்புக்கொண்டு, அதை எதிர்த்துப் போராடச் செய்ய வேண்டும் என்பதையே நோக்கமாகக் கொண்டிருந்தார் பாரதியார். ரஷியா நாட்டிலே நடைபெற்றுக்கொண் டிருந்த புரட்சிகளே எடுத்து எழுதிவிட்டு இங்கும் அவ்வாறு புரட்சி உண்டாக்கலாம் எனத் தூண்டுகிருர் நம் மகாகவி. 'பாரதமாதாவுக்குத் திருப்பள்ளி எழுச்சி', 'திருத் தசாங்கம் முதலிய பாடல்களால் அன்று, தேசமே