பக்கம்:பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 அம்பிகையின் அவதாரம் என்று முதலிலே எண்ணும்படி தூண்டுகிருர் பாரதியார். ஆனால், வரலாறு காட்டும் உண்மைகளை நோக்கும்போது, இதற்குத் தேவையே இல்லை என்று முடிவுகட்டிக் கொள்ளுகின்ருர். பாரத தேசத்தின் சாதனைகள், கற்பனையும் கடந்து நிற்கின்றன. காடுகளிலே தனித்திருந்து முனிவர்கள் உருவாக்கிய நமது வேதம், நமது உபநிஷத்துகள், நமது கோயில் சிற்பங்கள், நமது கலைகள் ஆகியவற்றையெல்லாம் இன்று உலகத்தின் சிறந்த ஆராய்ச்சி அறிஞர்கள் கண்டு வியந்து போற்று கிருர்கள். இதற்குக் கற்பனை வேண்டுவதே இல்லை. உண்மை யான பெருமையை மட்டும் அறிந்துகொண்டால் போதும். அவன் உலகத்திற்குப் பாரதிய்ார் எழுதியவாறு லோக குருவாக இருக்கத் தகுதி உடையவன். தமது கொள் கையைப் பின்பற்றினல் உலகத்தில் மீண்டும் யுத்தமே வராது என்பதைக் காந்தி அடிகள் லோக குருவாக இருந்து நிருபித்துக் காட்டிவிட்டார். இந்த நூற்ருண்டிலே தோன்றிய ஐன்ஸ்டின் என்ற மேதை 'இப்படிப்பட்ட மனிதரும் உடம்போடும் சதையோடும் உலாவினர் என்று பிற்காலச் சந்ததிகள் நம்பவே முடியாதபடி அவ்வளவு உயர்ந்த மனிதர்' என்று காந்தியடிகளை மிகவும் பாராட்டியிருக்கிருர். ஆதலால், இப்பொழுதுள்ள ஜாதிகள், மற்ற பிரிவுகள் எல்லாம் ஒழிந்து பாரத தேசம் புது மலர்ச்சி பெறும்போது, லோக குருவாக இருக்கத்தக்க தகுதியை அடையும். 'எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே” என்ற கவிதை, பாரதியார் எழுதியவற்றுள் ஒரு மாணிக்கம். இந்த நாட்டிலேதான் எங்கள் அன்னையர், தோன்றி மழலைகள் கூறியது; அவர்கள் கன்னியராகி நிலவினில் ஆடிக் களித்தது; நீர் விளையாடி பொன்னுடல் இன்பமுற்றது; மங்கைப் பருவம் எய்தி இல்லறம் நடத்தி,