பக்கம்:பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியாரின் தோத்திரப் பாடல்கள் பக்தியினல் மேன்மைகள் பல அடையலாம் என்று தெளிவாகக் கூறிவிடுகின்ருர் பாரதியார். பக்தியினல் என்னென்ன நன்மைகள் பெறலாம் என்று அடுக்கிக் கொண்டே போகிருர் நமது மகாகவி. உண்மையில் பக்தியும் நகைச்சுவையும்தாம் பாரதியாரின் உடம்பைப் பேணிப் பாதுகாத்து வந்திருக்கின்றன. தமது இரண்டாவது அன்புக் குழந்தையாகிய பாப்பா நோய்வாய்ப்பட்டிருந்தபோது பாரதியார் பெருங் கவலைக் குள்ளாயினர். ஆ ைல் அவருடைய தெய்வபக்தி, பாப்பாவுக்கு ஏற்பட்ட நோயை முற்றிலும் போக்கி விட்டது. 'பராசக்தி! என் குழந்தையைக் காப்பாற்று! பராசக்தி பராசக்தி!' என்று பாரதியார் சுவரிலே மோதிக் கொள்வாராம், அவருடைய தெய்வபக்தி அவர் குழந்தையைக் காப்பாற்றி விட்டது. பாரதியாருக்குப் பராசக்திதான் இஷ்ட தெய்வம். ஆனல் அவருக்கு எம்மதமும் சம்மதந்தான். ஆகவேதான் தாம் இயற்றிய தெய்வப் பாடல்களிலே இயேசு கிறிஸ்து, அல்லா, எகோவோ, சிவபெருமான், முருகன், கண்ணன்