பக்கம்:பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 "அத்தனை கோடிப் பொருளினுள் ளேநின்று வில்லை யசைப்பவளை-இந்த வேலையனைத்தையும் செய்யும் வினைச்சியைத் தொல்லை தவிர்ப்பவளே-நித்தம் தோத்திரம் பாடித் தொழுதிடு வோமடா!' என்று பாடி முடிக்கிரு.ர். "சக்திக்கு ஆத்ம சமர்ப்பணம் என்ற கவிதையில் எவ்வாறு தமது ஒவ்வோர் உறுப்பும் பராசக்திக்குக் கருவியாகப் பயன்படவேண்டும் என்னும் தம் அவாவின நன்கு விளக்குகின்ருர். ஆறு துணை என்பது ஒரு மணியான கவிதை' பலவேருகப் பிரிந்துகிடந்த இந்து சமயத்தை எவ்வாறு ஆதிசங்கரர் ஆறு முக்கியமான அகச்சமயங்களாக அமைத்தாரோ, அதேபோலப் பாரதியார், ஆறு துணை என்ற கவிதையிலும், தமக்கு விருப்பமான ஆறு தெய்வங் களைப் போற்றுகின்ருர். வெற்றி வடிவேலனை நினைக்கும் போதே அவருடைய வீரம் முன்னல் நிற்கின்றது. 'சுற்றிநில் லாதேபோ-பகையே துள்ளி வருகுது வேல்" என்ற அடிகள் அட்சரலகம் பெறும் என்று திரு. வ. வெ. சு. ஐயர் அவர்களே புகழ்ந்திருக்கிருர். கண்ணனை நினைத்த மாத்திரத்திலேயே அவனுடைய குழலிசை பாரதி யாருக்கு மனக்கண் முன்பு ஒலிக்கின்றது. "மாம்பழ வாயினிலே-குழலிசை வண்மை புகழ்ந்திடுவோம்." என்ற அடிப்படை நாதம் அவரிடத்திலே பொங்குகின்றது 'ஓம்சக்தி ஒம்' என்ற ஒலியே அவருக்கு மந்திரச் சொல்லாக இக்கவிதையில் விளங்குகின்றது. 'ஓம்' என்ற