பக்கம்:பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 சொல்லுக்கு ஒரு தமிழ்ச்சொல் வேண்டும் என்று மகாகவி பாரதியாரே மெளன விரதம் இருக்கின்ருர் அத்தனை சக்தி வாய்ந்தது. 'ஓம்' என்ற மந்திரச் சொல். பாரதியாருக்கு மெலிந்த பூஞ்சையான உடல். அது இரும்பைப்போல வலிமையுற வேண்டும் என விரும்புகிருர். கிருத யுகத்தினை மீண்டும் நிலைநாட்ட வேண்டுமென்று பல இடங்களில் கூறியிருக்கிரு.ர். விநாயகர் நான்மணி மாலை'யிலிருந்து ஒரு சான்று: "மொய்க்குங் கவலைப் பகைபோக்கி, முன்னேன் அருளைத் துணையாக்கி, எய்க்கும் நெஞ்சை வலியுறுத்தி, உடலை இரும்புக் கிணையாக்கிப் பொய்க்குங் கலியை நான்கொன்று, பூலோ கத்தார் கண்முன்னே, மொய்க்குங் கிருத யுகத்தினையே கொணர்வேன், தெய்வ விதியிஃதே." பூஞ்சையானது உடல்மட்டும்தான். ஆனல், அதனுள் அறிவு சுடர்விட்டுப் பிரகாசிப்பதைப் பாரதியாரே உணர்ந் திருக்கிரு.ர். இப்படிப்பட்ட சுடர்விடும் அறிவை வீணுக் கலாமா என்று பராசக்தியிடத்திலே கேட்கின்ருர்: "நல்லதோர் வீணைசெய்தே-அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடி சிவசக்தி-என்னைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய் வல்லமை தாராயோ-இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே.” காணி நிலம் வேண்டும் என்று தொடங்கும் புகழ். பெற்ற பாட்டிலும், இவ்வையகத்தைப் பாலிப்பதுதான் தம் நோக்கம் என்னும் தமது கருத்தை வெளியிடுகின்ருர்,