பக்கம்:பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

26


பாரதியார் இவ்வாறு நயமாக வரம் கேட்பதை விடுத்துச் சற்றுக் கடுமையாகவே, 'யோக சித்தி' என்ற கவிதையில் கேட்கின்றார். கடன் தொல்லைகளும் பிற தொல்லைகளும் சேர்ந்து இவ்வாறு கேட்கச் சொல்லினவோ என்னவோ?

திருமதி யதுகிரி அம்மாள் தாம் எழுதிய 'பாரதி நினைவுகள்' என்னும் சுவையான நூலில் இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டதாகக் குறிப்பிடுகின்றார். அப்பொழுதும் தமது நாட்டு மக்களை உயர்த்தவேண்டும் என்ற குறிக் கோளை மறவாதிருப்பது குறிப்பிடத் தக்கது.


தேடிச் சோறுநிதந் தின்று-பல சின்னஞ் சிறுகதைகள் பேசி-மனம் வாடித் துன்பமிக உழன்று-பிறர் வாடப் பலசெயல்கள் செய்து-நரை கூடிக் கிழப்பருவ மெய்தி-கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்-பல வேடிக்கை மனிதரைப் போல-நான் வீழ்வே னென்றுநினைத் தாயோ?

நின்னைச் சிலவரங்கள் கேட்பேன்-அவை நேரே இன்றெனக்குத் தருவாய்-என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள்-இன்னும் மூளா தழிந்திடுதல் வேண்டும்-இனி என்னைப் புதியவுயி ராக்கி-எனக் கேதுங் கவலையறச் செய்து-மதி தன்னை மிகத்தெளிவு செய்து-என்றும் சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்.

தோளை வலிவுடைய தாக்கி-உடற் சோர்வும் பிணிபலவும் போக்கி-அரி வாளைக் கொண்டுபிளந் தாலும்-கட்டு மாரு வுடலுறுதி தந்து-சுடர்