பக்கம்:பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை எளிய பதங்கள், யாருக்கும் புரியும்படியான சொற்கள், கமார் இரண்டொரு வருஷத்துத் தமிழ்ப் பழக்கமே உள்ளவர்கூட எளிதில் புரியும்படியான வாக்கிய அமைப்புகள்-இவற்றையெல்லாம் வைத்து ஒரு நல்ல கவிதை இயற்றுவோன் உண்மையிலே தமிழுக்குச் சிறந்த தொண்டாற்றுபவன் என்பது பாரதியாரது கொள்கை. கொள்கை மட்டுமல்ல, அதைக் கவிதையிலும், உரை நடையிலும் எழுதியே நிரூபித்திருக்கிருர் நம் கவியரசர். எளிமையிலும் வலிமை வாய்ந்த உணர்ச்சிகள் பொங்கும் படி எழுதலாம் என்பதற்குப்பாரதியாரே சான்று. அவரும் டாக்டர் மகாமகோபாத்தியாய அய்யர் அவர்களும், இராமலிங்க வள்ளலாரும் இதை உண்மை என்று நிலை நாட்டிவிட்டார்கள். இனிமேல் பழைய பண்டித நடை ஒரு கேலிக்கு இடமாகவே ஆகும். அவ்வளவு தெளி வாகக் காட்டிவிட்டார் நம் மகாகவி. ஆகையால் எனது திறய்ைவின் ஒரு பகுதி மிக எளிதாகவே முடிந்துவிட்டது, ஏதாவது விளக்கம் தருகின்ற வகையில் பாரதியாரது கவிதையை மேற்கோளாகக் காட்டியிருக்கிறேனே"தீவிர், அங்கு. கடினமான சொற்களுக்குப் பெரும்பாலும் இடமே இல்லை. "பாஞ்சாலி சபதம்’, ‘குயில் பாட்டு என்னும் இரண்டு நூல்களுக்கும் மேற்கோள் எடுத்துக் காட்டியிருக்கிறேனே தவிர, விளக்கம் செய்ய முற்படவே இல்லை. தமிழ் மக்களுக்கு யமகம், மடக்குப் போன்ற சிக்கலான கவிதை கள் பாரதியார் வாக்கிலிருந்து புறப்படவே இல்லை. இதுதான் ஒரு மொழியில் மறுமலர்ச்சி என்பது. எண்ணம் எழுகின்றது போலவே எழுத முடியுமானல், அதுவே சிறந்த உரைநடைக்கு எடுத்துக் காட்டாகும். இதனே