பக்கம்:பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 இறுதியில் அவர் தமது உணர்ச்சிகளையெல்லாம் கட்டுப்படுத்திக்கொண்டு "இப்படியே எழுது. மிக நன்முக இருக்கிறது. ஒரு நாவலாக முடித்துவிடு' என்று உற்சாகத் தோடு சொன்னர். இப்படி எழுந்ததுதான் 'Uncle Tom's Cain' அதைப் படித்துக் கண்ணிர் விடாதவர் எவரும் இல்லை. அந்நூல் லட்சக்கணக்கான பிரதிகள் விற்றது. நீக்ரோ அடிமைத்தனத்தை ஒழிக்க அதுவும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது என்று சொல்லலாம். இதுபோல, நேரில் கண்ட அனுபவத்தை மிகத் திறமையாக அழகிய சொற்களால் கவிதை எழுதமுடியும். ஆனல், நேரில் கண்டு அனுபவித்திராத பல உண்மை களையும் சொல்லுவார் பாரதியார். அவற்றைக்கூடத் தமது எழுத்து வன்மையால் ஒரளவு சிறப்பாகச் செய்ய முடியும். ஆனால், இது ஆழ்ந்த உணர்ச்சி, இது படிப்பினல் வந்த உணர்ச்சி என்று இனம் கண்டுகொள்ள முடியும். அப்படிப்பட்ட ஒரு கவிதைதான் நான்'. 'வானில் பறக் கின்ற புள்ளெலாம் நான்' என்று தொடங்கும் அக்கவிதை. இது மகான் அரவிந்தருக்கும் பாரதியாருக்கும் உள்ள ஆழ்ந்த தொடர்பையே குறிக்கும். ஆனால், 'காக்கைச் சிறகினிலே நந்தலாலா' என்று தொடங்கும் 'நந்தலாலா கவிதையும், 'காயிலே பு வி ப் ப .ெ த ன் ன கண்ண பெருமானே’ என்ற தொடங்கும் கண்ணபெருமானே' கவிதையும், இவை போன்ற வேறு சில சின்னஞ்சிறு கவிதைகளும் நவமணிகளாகப் போற்றத்தகுந்தவை. இவை சிறிய கவிதைகள்தாமே என்று தமது மனைவியார் கருதுவதை அவர்களுடைய முகக் குறிப்பி லிருந்து அறிந்துகொண்ட பாரதியார், "செல்லம்மா, இவை சின்னஞ் சிறியவை என்றுதானே நினைக்கின்ருய்? இவற்றை ஏற்ற இசை கொண்டு பாடினல் மிகுந்த புகழ்