பக்கம்:பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன் பாட்டு திருமதி யதுகிரி அம்மாளின் தாத்தா வைணவ நூல் களில் சிறந்த வித்வான். மிகுந்த சொல் சாதுரியம் உடையவர். அவர் வைணவ நூல்களைக் காலட்சேபம் செய்தால், கேட்பவர்கள் அதிலேயே லயித்துவிடுவார்கள். சிறு குழந்தைகளுக்கும் புரியும்படியாகச் சொல்வதிலே அவர் மிகவும் சிறந்தவராம். பாரதியாருக்கும் அவருக்கும் அடிக்கடி விவாதம் நடப்பதுண்டு என்று திருமதி யதுகிரி அம்மாள் தாம் எழுதிய 'பாரதி நினைவுகள்' என்ற நூலிலே குறித்திருக் கிருர். பாரதியாரின் கவித்திறமையையும், மதி நுட்பத்தை யும் திருமதி யதுகிரி அம்மாளின் தாத்தா புகழ்ந்து பேசு வாராம். பலநாள் அவர் வீட்டில் பாரதியார் தங்கியிருப் பாராம். ஒரு சமயம் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் நம்மாழ் வாருடைய திருவாய்மொழியில் சில பாடல்களை எடுத்துக் காட்டி அவற்றின் நுட்பமான பொருள்களையும் விளக்கின. ராம். இவ்வாறுதான் பாரதியாருக்கு வைணவ சம்பந்த மான தொடர்பு ஏற்பட்டது. அதுவே கண்ணன் பாட்டு’ என்ற விலை மதிக்கமுடியாத பாடல்கள் உருவாவதற்குக் காரணமாக அமைந்தது என்று.கூறலாம்.