பக்கம்:பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 நம்மாழ்வார் ஒரு சிறிய அடியிலே செறிவாகப் பொருள் கொள்ளுமாறு பல நுட்பமான கருத்துகளைத் திணித்து வைத்திருப்பார். அதன் சிறப்பை பாஷ்யக்காரர் மூலம்தான் அறிந்துகொள்ள முடியும். சாதாரண பொதுமக்களால் அத்தனையையும் ஒ ேர ய டி. ய ா க விளங்கிக்கொள்ள முடியாது. ஆனல் பாரதியாரோ ஒரு நாடகக்காட்சி போலக் கற்பனை செய்து எல்லாருக்கும் எளிதில் புரியும்படி யாகச் செய்துவிடுவார். எடுத்துக்காட்டாக, ஒன்றை இங்கே கவனிக்கலாம். திருகோளுர் என்பது பாண்டி நாட்டில் உள்ள ஒரு சிறந்த ைவ ன வ த் தல ம். நம்மாழ்வார் அந்தத் திருப்பதியில் உள்ள பெருமானுக்கு மங்களாசாசனம் செய்துள்ளார். அதில் ஒரு பாடல் வருமாறு: 'உண்ணும் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையு மெல்லாம் கண்ணன் எம்பெருமான் என்றென்றே கண்கள் நீர்மல்கி மண்ணினு ளவன்சீர் வளம்மிக்க வனூர் வினவி திண்ணமென் னிள மான் புகுமூர் திருக்கோ ளுரே' தெய்வ வாக்கான இப்பாடல், பொருள் செறிந்தது. பாஷ்யக்காரர் செய்து அளித்துள்ள விளக்கத்தால் அன்றி எளிதில் பொருள் விளங்காது. ஆனால், பாரதியார் தமது மதிநுட்பத்தால் அதை ஒரு நாடகக் காட்சியாகவே இசையோடு காட்டிவிடுவார். அப்படித்தான் உருவானது கண்ணம்மா என் காதலி' என்ற பாடல். 'மாலைப் பொழுதில் ஒரு மேடைமிசையே’ என்று தொடங்கும் அது, அட்சரலகம் பெறும்படியான கவிதையாகும். "மாலைப் பொழுதிலொரு மேடை மிசையே வானையும் கடலையும் நோக்கியிருந்தேன்;