பக்கம்:பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 இவ்வாறு ஒரு நாடகக்காட்சி போல எல்லா இடங் களிலும் தம் காதலியாகிய கண்ணம்மாவின் முகத்தைத் தாம் காண்பதாக அற்புதமாய் ஒர் ஒவியம் தீட்டி விடுகிருர் பாரதியார். 'அறம் செய விரும்பு என்ற உயர்ந்த நீதியைக் கற்பிக்கிருர் ஒளவையார். அதிலே அவ்வளவு சுவை இருப்பதில்லை. அறம் செய்ய விரும்புவதால் தான் பெற்ற இன்பத்தை ஒரு கலையாகப் புனைந்துவிடுகிருர் நம் கவிஞர். முதலில் இருப்பதைவிடக் கதை, உள்ளத்தில் ஆழப் பதிந்து விடுகிறது. அது போலத்தான் நம்மாழ்வார் தெய்வ வாக்கிலும் செறிவாக உள்ள ஒரு பேருண்மையை வைத்துக் கொண்டு, அழகிய நங்கை ஒருத்தி வருவதும், விளையாட்டாகக் கண் மறைப்பதும், கேள்வி பதில்களைப் பரிமாறிக்கொள்வதும் ஆகிய ஒர் உயர்ந்த நாடகக் காட்சியைக் கற்பனை செய்துகொள்கிருர் பாரதியார். நம்மாழ்வார்களுடைய அற்புதமான பொருட்செறிவு நிறைந்த ஒரடி பாரதியாருக்கு ஒரு நாடகக் காட்சி யாகவே அமைந்துவிடுகின்றது. நம்மாழ்வார் பெருமை யைக் குறைத்துச் சொல்லவேயில்லை. அதற்கு விளக்கம் தந்திருக்கிருரே, அவருடைய திறமையைத்தான் மெச்சிப் போற்றுகின்றேன். இ வ் வகை யி ல் பாரதியாருடைய கவிதைத் திறமை சிறந்து நிற்கின்றது. திருமதி யதுகிரி அம்மாளின் தாத்தாவுடன் பாரதியார் நன்கு விவாதித்து, பல பாடல்களுக்கு இசை அமைத்து, அடுத்த நாள் பாடிக் காண்பிப்பாராம். 'கண்ணன் பாட்டு என்ற நூலில் வந்துள்ள சில பாடல் களாவது இவ்வாறு தோன்றியிருக்கும் என்று நம்பலாம். ஆனல் நிச்சயமாகச் சொல்லமுடியாது.