பக்கம்:பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 இறைவனே எந்த பாவத்திலும் வைத்து வணங்கலாம் . பெரியாழ்வாருக்குக் கு ழ ந் ைத பாவத்தில்தான் ஈடுபாடு அதிகம். அதேபோல ஆண்டாள் நாயகியாகவும், பெருமாளே நாயகனுகவும் பாவித்து, சில ஒப்பற்ற பாடல் களைப் பாடியிருக்கின்ருர். பாரதியார், கண்ணன் என் தோழன்’, ‘என் குழந்தை', 'என் விளையாட்டுப்பிள்ளை', "என் தாய்', 'என் தந்தை', 'என் அரசன்', 'என் சீடன்”, "எனது சற்குரு முதலான நிலைகளிலே வைத்து ஒன்பது அருமையான கவிதைகளே இயற்றியிருக்கிருர். பிறகு நாயகா நாயகி பாவம் வருகின்றது. அதிலே பன்னிரண்டு சிறந்த கவிதைகளை இயற்றியுள்ளார். பின்னல், என் ஆண்டாள்', 'கண்ணம்மா எனது குலதெய்வம் என்னும் இருகவிதைகள் வருகின்றன. மொத்தமாக இருபத்துமூன்று பாடல்களிலே நாயகா, நாயகி பாவத்திற்குப் பன்னிரண்டு பாடல்கள் அளித்துவிடுகின்ருர். காதற்சுவை ஒரு கவிஞனுக்குப் பாலும் தேனும் போல. ஆனல் திறனாய்வில் வல்லுநரான திரு. வ.வே.சு. ஐயர் அவர்கள் 'இந்த காதற்சுவையைக் கையாள்வது கத்தியின் கூர்முனையில் நடப்பது போலாகும். எந்தப் பக்கம் சரிந்தாலும் தவறு நேர்ந்துவிடும். பாகவதத்திலும் சுகப்பிரம்மம் இந்நிலை யில் கொஞ்சம் தடுமாறி இருக்கிருர்' என்று தீர்ப்பளிக் கின்ருர். கண்ணன் பாட்டின் இரண்டாம் பதிப்பிற்கு முன்னுரை எழுதவந்த திரு. வ.வே.சு. ஐயர் கண்ணன் பாட்டில் உள்ள குறை, நிறைகளைச் சீர்தூக்கிப் பார்க்கிரு.ர். அவர் அந்த முன்னுரையிலேயே எழுது கின்ருர் : 'நமது கவியும் இப்பாவத்தை விரிக்கையில், பரபக்தியைவிடச் சரீரமான காதலையே அதிகமாக வர்ணித்திருக்கிருர் ஆல்ை சுகப்பிரம்மமே நிறுத்த