பக்கம்:பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குயில் பாட்டு பாரதியார் தமக்கு இசையின்மேல் உள்ள அடங்காத காதலை வெளிப்படுத்தவே இச்சிறு நூலை உருவாக்கியிருக் கிருர் என்று தோன்றுகிறது. பாட்டைப்பற்றிப் பல இடங்களிலே அவர் கட்டுரை எழுதியுள்ளார். ஒரு கட்டுரை என்ருல், எடுத்துக்கொண்ட பொருள் பற்றியும், அது இன்று எந்த நிலையில் உள்ளது என்பது பற்றியும் சீர் தூக்கிப் பார்க்கவேண்டியது அக்கட்டுரையாசிரியரின் கடமையாகும். கர்நாடக இசையைப்பற்றி வெகுவாகப் புகழ்ந்திருந்தாலும், அந்த இசையிலே படிந்துள்ள குறை பாடுகளை எடுத்துக்கூறி, அவற்றை எவ்வாறு களையலாம் என்று தெளிவாகக் கூறுவது அக்கட்டுரையாளரின் கடமை யாகும். இதைப் பாரதியார் நன்ருகவே நிறைவேற்றி யுள்ளார். இதைப் பாரதியும் பாட்டும்’ என்ற என் முதல் நூலில் விரிவாகக் காணலாம். ஆனால், இசையைப்பற்றித் தம் கருத்தை வெளிப் படுத்தும் போது, இம்மாதிரி சீர்தூக்கிப் பார்க்கவேண்டிய தேவையில்லை. அதனல்தான் 'கு யி ல் பாட்டிலே’ பாரதியார், 'நான்முகக் கடவுளே, நீ எத்தனையோ விந்தை களைப் படைத்திருக்கிருய். ஆனால், இசை என்ற ஒன்றைப்