பக்கம்:பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 உள்ளே நுழைத்திருக்கிருர். அது என்னவென்று ஆராய் வோம். கவிஞர் தற்செயலாக மாஞ்சோலைக்கு உலாவச் செய்கின்ருர். அங்குக் குயில் ஒன்றன் பாட்டு விந்தையான குரலில் அவர் உள்ளத்தைக் கவர்கின்றது. குயிலின் மோகனப் பாட்டு முடிகின்றது. அவ்வளவு இனிமையாகப் பாடிய குயில், அடுத்த கணத்திலே சோக முற்றுத் தலை குனிகிறது. அதற்குக் காரணம் என்ன எனக் கவிஞர் கேட்கிரு.ர். அதற்குக் குயில், 'காதலை வேண்டிக் கரைகின்றேன். இல்லையெனில் சாதலை வேண்டித் தவிக்கின்றேன். சிந்தை பறிகொண்டு செல்கின்றீர். அன்போடு நீரிங்கே அடுத்த நான்காம் நாள் வரவேண்டும். வாரீரேல் ஆவி தரியேன்” என்று கூறித் தனது மட்டற்ற காதலை வெளியிட்டது. கவிஞர் குயிலிடத்தில் என்றுமில்லாத காதல் கொள் கின்ருர். அதனல் மறுநாளே அக்குயிலை மீண்டும் பார்க்க ஆசை பொங்கியது. நான்காம் நாள் வரச் சொல்லியிருந்தும் அடுத்த நாளே குயிலிருக்கும் மாஞ் சோலைக்குச் செல்கின்ருர். ஆனால், அங்கே குயில், முதல் நாள் கவிஞரிடத்தில் கூறியது போல், ஒரு குரங்கினிடத்திலும் காதல் மொழி பேசுகின்றது. காதல் மொழியாக இருந்தாலும் அதில் நகைச்சுவை குமிழியிட்டுப் பொங்குகிறது. குரங்கோடு குயில், காதல் மொழி பேசுவதைப் பாருங்கள் : 'வ: ரரே! ஈடறியா மேன்மையழ கேய்ந்தவரே! பெண்மைதான் எப்பிறப்புக் கொண்டாலும, ஏந்திலே! தின்னழகைத்