பக்கம்:பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 சாதிப் பிறப்புத் தராதரங்கள் தோன்றிடுமோ? வாதித்துப் பேச்சை வளர்த்தோர் பயனுமில்லை. மூட மதியாலோ, முன்னைத் தவத்தாலோ, ஆடவர்தம் முள்ளே அடியாளுமைத் தெரிந்தேன். மானுடராம் பேய்கள் வயிற்றுக்குச் சோறிடவும் கூணர்தமை ஊர்களிலே கொண்டு விடுவதற்கும் தெய்வமென நீருதவி செய்தபின்னர், மேனிவிடாய் எய்தி யிருக்கு மிடையினிலே, பாவியேன் வந்துமது காதில் மதுரவிசை பாடுவேன்; வந்து முதுகில் ஒதுங்கிப் படுத்திருப்பேன். வாலிலடி பட்டு மனமகிழ்வேன், "மா" வென்றே ஒலியிடுதும் பேரோலியோ டொன்றுபடக் கத்துவேன் மேனியிலே உண்ணிகளை மேவாது கொன்றிடுவேன். கானிடையே சுற்றிக் கழனியெலாம் மேய்ந்து, நீர் மிக்கவுன வுண்டுவாய் மென்றசைதான் போடுகையில் பக்கத் திருந்து பலகதைகள் சொல்லிடுவேன். காளை யெருதரே! காட்டிலுயர் வீரரே! தாளைச் சரணடைந்தேன், தையலெனைக் காத்தருள்வீர்.” இதுகேட்டுக் கவிஞர் சினங்கொண்டார்; உடைவாளை வீசினர். குயிலும் மாடும் மாயமாய் மறைந்து போயின. நான்காம் நாள் கவிஞர், குயில், தமக்கு இழைத்த வஞ்சனையெல்லாம் எண்ணிக்கொண்டிருக்கையில் காடு இருக்கும் திசையில் ஏதோ ஒரு கரும்பறவை வானத்திலே தோன்றுகிறது. இது என்னை ஏமாற்றிய வஞ்சனைக் குயிலோ என்று கவிஞர் எண்ணுகிரு.ர். அவ்வுருவம் சரியாகப் புலப்படவில்லை. ஆகவே, அக்கரும்பறவை இருக்கும் திசை நோக்கிச் செல்லுகிரு.ர். கவிஞர் நின்ருல் அது நிற்கும், கவிஞர் நடந்தால் அதுவும் செல்லும். இறுதியிலே கவிஞர் அந்த ம்ாஞ்சோலையை அடைகிரு.ர். குயில் அங்கே எதிரே தோன்றியது. கவிஞர் வஞ்சனைக் குயிலே’ என்று ஏதேதோ பழித்துரைக்கின்ருர்.