பக்கம்:பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 அதைக் கேட்டுக் குயில், உள்ளம் கலங்கித் தன் முற் பிறவிக் கதையை எடுத்துரைக்கின்றது. முற்பிறவியில் தான் ஒரு அழகிய பெண்ணுக வளர்ந் ததையும், தன்னை மாடன், குரங்கன் என்னும் இரு காளையரும் மணம் செய்துகொள்ளப் போட்டியிட்டதை யும் கூறுகிறது. மாமன் மகனுகிய மாடன், "என்னைத்தான் நீ மணக்கவேண்டும்’ என்று மிகவும் கெஞ்சிக் கேட்டுக் கொண்டதால் மனமிரங்கி, மங்கையும் மணக்கச் சம்மதித் தாள். அதற்கிடையில், தன் மகன் குரங்கனுக்குப் பெண் தரவேண்டும் என்று அவன் தந்தை கேட்க, அதற்கு மங்கை தந்தை ஒப்புக்கொள்கிருர். இந்நிலையில் ஒரு நாள் அவள் காட்டிலே தன் தோழியருடன் விளையாடிக்கொண்டிருந்த வேளையில் சேர இளவரசன் ஒருவன் அங்குத் தோன்றுகிருன். மங்கையும் மன்னன் மகனும் ஒருவர்மீது ஒருவர் அளவிறந்த காதல் கொள்கின்றனர், கலவி இன்பத்தையும் துய்க்கின்றனர். இந்த வேளையிலே, மாடனும் குரங்கனும் அங்கு வந்து அந்தக் காட்சியைக் காண்கின்றனர். கோபத்தால் கொதித்த அவ்விருவரும் வாளே உருவி இளவரசன் மேல் பாய்கின்றனர். காதலில் கலந்திருந்த இளவரசன், தன்மீது வாள் வீச்சுப் பட்டதும் திரும்பி, சட்டென்று தன் உடைவாளை உருவி, மாடனயும் குரங்கனையும் கொன்று வீழ்த்துகிருன். மன்னர் மகனும் தன் மேல் பட்ட காயத் தால் சோர்வுற்று வீழ்கிருன். அப்போது அவன் 'மாதரசே, இனிமேல் நான் உயிர் பிழைக்க மாட்டேன். மறு பிறவியில் நாம் சந்தித்து