பக்கம்:பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 பரமாத்மாவுடன் இரண்டறக் கலந்து பேரின்பம் அடையும் என்பது இதன் சாரமாகும். கவிஞர் என்னும் பாத்திரம் பரமாத்மாவைக் குறிக் கின்றது. பாரதியும் இஷ்ட தெய்வமாகப் போற்றிப் பரவும், மூன்று காதல்’ என்னும் கவிதையில் வந்துள்ள பராசக்தியே கரும்பறவையாகத் தோன்றி அப்பே ரின்பத்தை அடைய உதவுகின்ருள். கரும்பெண்மை அழகுதான் அன்னை வடிவம். குயில் பாட்டு, நூளலவில் சிறியத்ாக இருந்தாலும் வளமான சொற்களாலும் அரவ வனப்பாலும் அது அமர காவியமாக ஆகிவிடுகின்றது. குரங்கு என்னும் பாத்திரம் மனத்திற்குச் சரியான உவமானம். அது எப்போதும் சலித்துக்கொண்டேயிருக் கும். ஒரு கொம்பை விட்டு மற்ருென்றுக்குச் சதா தாவுவது குரங்கின் இயல்பு. அதனால்தான் தாயுமானவர் 'கந்துக மதக் கரியை வசமாய் நடத்தலாம்' என்று தொடங்கும் மிக அழகான பாடலில், சிந்தையை அடக்கியே சும்மா யிருக்கின்ற திறம் அரிது’ என்று பாடியுள்ளார். வேருெருவர் காணுமல் உலகத்தில் உலாவலாம். ஆனல் மனத்தை அடக்கிச் சும்மா இருக்கின்ற வல்லமை ாருக்கும் கிட்டுவதன்று என்று அப்பாடலிலே கூறி யுள்ளார். ஆகவே, குரங்கன் என்பதற்கு, சதா சலித்துக் கொண்டிருக்கும் மனம் என்று பொருள் கொள்ளலாம். காளை மாடு ஆணவம் மிக்கது. அதை அடக்கி வசப் படுத்துவது எளிதன்று. ஆனால், பரமேஸ்வரன் அதன் மேல் ஏறி அதைக் கட்டுப்படுத்துகிரு.ர். அவ்வாறு கட்டுப்படும் போது, ஆணவ மலம் மிகச் சாதுவாகி, நன்மையே செய்