பக்கம்:பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 கின்றது. பரமேஸ்வரன் ஆணமாகிய பசுவை அடக்காத நிலையில், அது மூர்க்கத்தனமாகப் பல குறும்புகள் செய்கின்றது. ஆகவே, மாடன் என்னும் பாத்திரத்தை ஆணவ மலமாகவே கொள்ள வேண்டும். ஆணவ மலமாகிய மாடனும், எப்பொழுதும் சலித்துக் கொண்டிருக்கும் குரங்கனும் எதேச்சையாக இருக்கும் பொழுது பேய்களாக மாறிப் பல குறும்புகள் செய் கின்றனர். ஆனால், பரமாத்மா எதிரிலே அவற்றின் வல்லமை ஒடுங்கிப் போய் மறைகின்றன. பரமாத்மா என்பது இங்கு கவிஞரைக் குறிக்கின்றது. உண்மையான ஆழ்ந்த காதல் ஏற்படும் போது, பரமாத்மா, ஜீவாத்மா வாகிய பெண்ணுடன் கலக்கிறது. பின்பு இரண்டும் ஐக்கியமாகின்றன. தம் குயில் பாட்டை நெட்டை நெடுங் கனவு’ என்று பாரதி சொன்னலும், அதில் குரங்கன், மாடன் ஆகிய பாத்திரங்களை அமைத்திருப்பதால், அதற்கு வேதாந்தமாகிய தத்துவப் பொருள் உண்டென்பது நிச்சயமாகின்றது. நாயக நாயகி பாவத்தில், இந்த ஆழ்ந்த வேதாந்தக் கருத்தை, நமக்கு என்றும் சலிப்பு ஏற்படாதவாறு, மகாகவி பாரதியார் எடுத்துரைக்கின்ருர். குயில் பாட்டின் நகைச்சுவையைப் புகழ்வதா, ஆற்ருெழுக்கான அதன் இனிய நடையைப் புகழ்வதா, வேதாந்தக் கருத்தைப் புகழ்வதா என்று அறுதியிட்டுக் கூற முடியாதவாறு ஒரு வைரமணியாக அதைப் படைத்திருக் கிருர், நம் மகாகவி. குயில் ஏன் கவிஞரிடம் காதல் கொண்டு, பிறகு உடனே மாற்றிக்கொண்டு குரங்கிடமும் மாட்டிடமும் காதல் கொள்கிறது என்று ஐயம் ஏற்படலாம். மனத்தின் இயல்புதான் அது. எந்தப் பிராணி தனக்கு முன்னே வந்து நின்ருலும், தான் கொண்ட பழைய