பக்கம்:பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமர்ப்பணம் கடந்த வருடம் நான் நோய்வாய்ப்பட்டு எழுத முடியாத நிலையில் மிகவும் வேதனை யுற்றேன். பாரதி நூல்களைத் திறய்ைவு செய்ய வேண்டும் என்ற எனது நீண்ட் நாளைய அவா, கனவாகவே போய்விடுமோ என்று எண்ணி வருந்திய நேரத்தில், எனது அரிய நண்பரும், கொடை வள்ளலுமாகிய திரு. நா. மகாலிங்கம் அவர்கள் அவருடைய ஒய்வில்லாத வேலைகளுக்கு இடையே அடிக்கடி வந்து பார்த்து, என்னை எழுதுவதற்கு ஊக்குவித்தும், அன்றும் இன்றும் பல வழிகளில், "உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு" என்னும் திருக்குறளின் நெறிக்கு இலக்கணமாக இருந்து உதவி செய்துகொண்டிருப்பதையும் நான் என்றும் மறக்க முடியாது. அதன் விளை வாக எழுதப்பட்டது இந்நூலும் மற்றும் பல பாரதியார் நூல்களும். இந்நூலைத் திரு. நா. மகாலிங்கம் அவர்களுக்குப் பணிவுடன் சமர்ப்பிக் கின்றேன். வருடந்தோறும் பாரதியாருக்கு விழா நடத்தும் பெருந்தகையாருக்கு இந்தப் பாரதி நூற்ருண்டு விழா வருடத்தில் சமர்ப்பிப்பது சாலப் பொருத்தமேயாகும். மற்றும், பாரதி நூல்கள் வரிசையில் என்னுடைய ஒன்பது புத்தகங்களைப் பிரசுரித்து நல்ல முறையில் உதவி செய்த வானதி பதிப்பக உரிமையாளருக்கும் என் நன்றியைத் தெரி வித்துக்கொள்கிறேன். -ம. ப. பெரியசாமித்துரன்