பக்கம்:பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 உலகங்களுக்குப் பறந்துசென்ற அவர், தர்மலோகத்தி லிருந்து தவறி விழுந்து, மூர்ச்சை போட்டுப் பழைய திருவல்லிக்கேணி இல்லத்திலேயே கண் விழித்ததாக நூல் முடிகிறது. ராஜாஜி அவர்கள் தமது முன்னுரையில், கீழ்க் கண்டவாறு நல்லதோர் திறனாய்வு செய்திருக்கிருர் : 'இப் புஸ்தகத்தில் பாரதியார் எடுத்த விஷயங்கள் மிகப்பெரியவை. விஷயங்களின் கவுரவம் ஒருபுறமிருக்க, தற்காலத்தில் தமிழ் வாசக நடை.எவ்வாறிருக்க வேண்டு மென்பதைப் பாரதியார் எழுதிய இச்சிறு புஸ்தகத்தில் கண்டு கற்கலாம். அர்த்த புஷ்டியில்லாத அரற்றலின்றி, சொன்னதையே சொல்லி, பக்கங்கள் நிறைப்பதுமின்றி ஸ்படிகம் போன்ற தெளிவும், வைரம் போன்ற உறுதியும் பெற்ற இலக்கணப் பிழைகள் ஒழிந்த பேச்சுத் தமிழையே எவ்வாறு ஆழ்ந்த கருத்துக்களே எழுதவும் சித்திரிக்கவும் உபயோகப்படுத்தலாம் என்பதைப் பாரதியார் வசன நடையில் நாம் பார்க்கலாம். தமிழுக்குள் கிடக்கும் எல்லையற்ற சக்தியையும், லாகவத்தையும் பாரதியார் எழுத்துக்களில் தமிழ் மக்கள் பார்த்து அறிந்துகொள்ள வேண்டும். பயன் கொண்ட கற்பளு சக்தியும், கொழுந்து விட்டெரியும் நாட்டன்பும், விசாலமான தரும ஞானமும், நோவாத ஹாஸ்ய ரஸ்மும் தமிழ்த்தாயின் செல்வக் குழந்தை, வரப்ரஸாதர், பாரதியார் எழுதிய இந்நூலில் ஜ்வலிப்பதை அனுபவிக்கலாம்.' திரு. எஸ். ஜி. ராமானுஜலு நாயுடு அவர்களும், மூதறிஞர் ராஜாஜி அவர்களும் எனது திறய்ைவை மிக எளிதாக்கிவிட்டனர். ஞானரதம் என்ற பாரதியாரின் உரைநடை நூல் மிகுந்த முதுர்ச்சியானதும், வளமானதும், கற்பனை