பக்கம்:பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 குதிரை வண்டி கிடையாது என்ற விஷயம் அப்பொழுது தான் ஞாபகத்திற்கு வந்தது. அடடா! மிகுந்த செல்வம் இல்லாததனல், உலகத்தில் பல விதமாகிய இழிவான இன்பங்கள் மட்டு மல்ல. உயர்ந்த இன்பங்கள்கூடப் பெறுவதற்குத் தடை ஏற்படுகிறதே! என்று எண்ணினேன். அப்பொழுது, என் மனம், மூடா, ஸ்கல மனிதர்களிடத்திலும், ஈசன் ஞானம் என்பதோர் தெய்வீக ரதத்தைக் கொடுத்திருக் கின்ருர். அது விரும்பிய திசைக்கெல்லாம் போய் விரும்பிய காட்சிகளையெல்லாம் பார்த்து வரக்கூடிய வல்லமை உடையது. அதைப் பயன்படுத்தி இன்பமடை யாமல், எந்த நிமிஷத்திலும் உன்னைக் கீழே தள்ளித் தீங்கு செய்யக்கூடியதாகிய இழிய மரவண்டியிலே ஏன் விருப்பம் கொள்ளுகிருய்? என்றது. உடனே ஞானமாகிய ரதத்தைக் கொண்டு தயார் செய்து வைக்கும்படி எனது சேவகளுகிய 'சங்கற்ப'னிடம் கட்டளையிட்டேன். ரதம் வந்து நின்றது. அதில் ஏறிக் கொண்டேன். ஆனல், எனது ஞானரதம் மற்றவர்களுடையதைப் போல் அத்தனை தீவிரம் உடையதன்று. எளிதாக நெடுந்துாரங் கொண்டுபோக த் தக்கதும் அன்று. கொஞ்சம் நொண்டி. என்ன செய்ய லாம்? இருப்பதை வைத்துக்கொண்டுதானே காரியங் கழிக்கவேண்டும்? ஆகவே, அந்த ரதத்தின்மீது ஏறிக் கொண்டேன். அதிலேறி நான் கண்டு வந்த காட்சி களும் அவற்றின் அற்புதங்களுமே இந்தப் புத்தகத்தில் எழுதப்படுகின்றன.' ஞான ர த த் தி லே குமிழியிட்டுக்கொண்டிருக்கும் நகைச்சுவையைப்பற்றிச் சில பகுதிகளை எடுத்துக் காட்டாமல் என்னுல் இருக்க முடியவில்லை.