பக்கம்:பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 அம்மாள் குடக்கூலிக்கு ஞாபகப்படுத்தச் சொன்னுள். ராயர் நேற்றே சொன்னராம் இந்த மாதம் குழந்தைக்குக் காப்புவாங்க ரூபாய் தருவதாகச் சொல்லியிருந்தீர்கள். என்னைத்தான் ஏமாற்றுகிறது வழக்கமாகவே போய் விட்டது." இன்னும், அது இது என்று ஆயிரங்கணக்கு சொன்னுள். அன்று மாலை அவள் சொல்லிய கணக்குகளை எவ்லாம் தீர்க்க வேண்டுமானுல் குறைந்த பrம் மூன்று லக்ஷம் ரூபாய் வேண்டும் என்று என் புத்திக்குப் புலப்பட்டது. கடைசியாக, "தெருவிலே போகிற நாய் களுக்கெல்லாம் பணத்தை வாரியிறைக்கிறது; வீட்டுச் செலவைப்பற்றிக் கேட்டால் முகத்தைச் சுளிக்கிறது: இப்படிச் செய்து கொண்டே வந்தால், அப்புறம் என்ன கிடைக்கும்? மண்தான் கிடைக்கும்,' என்று ஆசீர்வாதம் பண்ணிப் பிரசங்கத்தை முடித்தாள். 'தலைநோவு தீர்ந்து போய்விட்டது. நீ தயவுசெய்து கீழே போகலாம்' என்று வணக்கத்துடன் தெரியப் படுத்திக்கொண்டேன்." இவ்வளவு லாகவமாக பாரதியார் ஒரு முதிர்ந்த உரை நடை எழுத்தாளர் போல ஞானரதத்திலும் மற்றுமுள்ள கட்டுரைகளிலும் காட்சியளிக்கிரு.ர். அவர் தாமே கூறியது போல, 'இப்பொழுதுதான் வசனநடை உருவாகிறது. அ ைத ச் செம்மைப்படுத்தவேண்டிய பொறுப்பு தமிழர்களிடம் உள்ளது என்று எச்சரிக்கை செய்தாலும் பாரதியார் தமது எழுத்து வன்மையால் ஒரு சிறந்த உரைநடையே உருவாக்கியிருக்கிருர் என்று சொல்லத் தோன்றுகிறது. காலத்திற்குக் காலம் தமிழ் உரைநடை மாறி அமைவது இயல்பு. அதனால் இதுவே உரைநடைக்கு முன்மாதிரியாக நாம் கொள்ள வேண்டிய தில்லை. என்ருலும், தமிழ் உரைநடையிலும் ஒரு வழி காட்டியாகப் பாரதியார் இருக்கிருர் என்பது திண்ணம்.