பக்கம்:பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாஞ்சாலி சபதம் மகா பாரதத்தில் எத்தனையோ பகுதிகள் இருக்க, பாஞ்சாலி, சபதம் செய்யும் பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு, அதைப் பாரதியார் காவியமாக்குதற்கு, ஒரு முக்கியமான காரணம் இருக்கவேண்டும் என்று நான் கருதுகிறேன். மகாபாரதத்தில் பாஞ்சாலியும் கட்டுண்டு கிடக்கிருள். அதிலிருந்து அவள் விடுபடுவதுபோலப் பாரத தேசமும் வலிமை வாய்ந்த பிரிட்டிஷ் இராஜ்ஜியத்தி லிருந்து விடுபடமுடியும் என்று மறைமுகமாகப் போதிக் கின்ருர் பாரதியார். 'ம ா ஜி னி யி ன் சபதம்", 'குரு கோவிந்தர், 'பெல்ஜியத்திற்கு வாழ்த்து' என்னும் வீரமூட்டும் கவிதைகளை இயற்றிய பாரதியார், மேலும் வீர உணர்ச்சியை மக்களுக்கு ஊட்ட வேண்டும் என்னும் நோக்கில் பாஞ்சாலி சபதத்தை இயற்றினர். ஆனால், இது முற்றிலும் கைகூடவில்லை. ஏனெனில், பாஞ்சாலி சபதத்தின் முதல் பாகத்தைப் பாண்டிச்சேரியிலே அச்சிட்டு, 1912-ம் ஆண்டு வெளியிட்டதாகத் தோன்று கிறது. பாஞ்சாலி சபதம் முழுமையும், அதை எழுதிய நமது மகாகவி மறைந்த பின்பேதான் வெளியானது. அதுவரை இந்நூல் வெளிவராதபடி வெள்ளையரின் கட்டுப்பாடு இருந்தது. ஆம், பாரதி எழுத்து என்ருல்