பக்கம்:பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 அவ்வளவு அச்சம் கொண்டிருந்தார்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தார். இது எவ்வாருயினும், பாஞ்சாலி சபதத்தை ஓர் அற்புதமான படைப்பாகச் செய்துவிடுகிருர் பாரதியார். பாரதியார் தமது முகவுரையிலே கூறுகின்ருt: 'எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு-இவற்றினையுடைய காவியமொன்று தற்காலத் திலே செய்து தருவோன் நமது தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோகிைன்ருன். ஓரிரண்டு வருஷத்து நூற்பழக்கமுள்ள தமிழ் மக்களெல்லோருக்கும் நன்கு பொருள் விளங்கும்படி எழுதுவதுடன், காவியத்துக்குள்ள நயங்கள் குறைவு படாமலும் நடத்துதல் வேண்டும்." பாரதியார் தமது நோக்கத்தைத் தாம் படைத்த எல்லா எழுத்துகளிலும் தவருது பின்பற்றுகிருர். எளிய பதங்களைக்கொண்டும் வலிமை வாய்ந்த உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய பாடல்கள் எழுதலாம் என்று பாரதியார் நன்கு நிரூபித்துவிட்டார். இது பின்னல் தோன்றுகின்ற கவிஞர்களுக்கு வழிகாட்டியாக அமைந்துவிடுகிறது. இனி பாஞ்சாலி சபதத்தைப் பார்ப்போம். சகுனியின் தூண்டுதலின் பேரில் பாண்டவர்களே அஸ்தினபுரத்திற்கு வருமாறு அழைப்பு விடுகிருன் துரியோதனன். சூதாட்டத் தில் வல்லவனை சகுனியும் துரியோதனனும் ஒன்று சேர்ந்து, பாண்டவர்களைத் தங்களுக்கு அடிமையாக்க வேண்டும் என்று திட்டமிடுகிருர்கள். முதலில், தன் தந்தையார் திருதராஷ்டிரன் அழைப்ப தாகப் பாண்டவர்களுக்கு அழைப்பு விடுக்க துரியோதனன் விரும்புகிருன். ஆனல் திருதராஷ்டிரன் அது தவறு