பக்கம்:பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியாரின் உரைநடை காட்டு விடுதலை இயக்கம் வெள்ளமெனப் பெருகி அலைமோதிக்கொண்டிருந்த க | ல த் தி ல் பாரதியார் சென்னைக்கு வந்து சேர்ந்தார். விடுதலை இயக்கம் அவரைக் கவர்ந்தது. அதன் விளைவாக உணர்ச்சி பொங்கும் பல தேசியப் பாடல்களை அவர் பாடினர். இப்பாடல்கள், பேச்சு மேடைகளில் எல்லாம் ஒலித்தன. மக்களின் உணர்ச்சியை எளிதில் தூண்டிவிட இவை பெரிதும் உதவின. அதனல் பாரதியார் மிகச்சிறந்த தேசபக்திப் பாடல்களைப் படைப்பவர் என்றே அக்காலத் தில் மக்களுக்கு அறிமுகமானர். அவருடைய மற்றப் பாடல்களே அவை வெளிவந்த காலத்திலேயே மக்கள் பெரிதும் கவனிக்கவில்லை. பின்னர்தான் அவருடைய பக்திப்பாடல்கள், குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம் முதலான சிறந்த கவிதைப் படைப்புகளும், மக்கள் மனத்தில் மெது வாக இடம் பெறலாயின. கவிதை என்ற முறையிலே உயர்ந்த ஸ்தானம் வகிக்கத்தகுந்தவை அப்பாடல்கள். அவை வெளியானதும் பெரும்பான்மையான மக்களின் உள்ளத்தை ஈர்க்காமலிருந்தது ஆச்சரியந்தான். இதைவிட ஆச்சரியம் என்னவென்ருல், அவருடைய உரைநடை இலக்கியம் இன்றுவரை அதிகமாகக் கவனிக்கப்பெருமலும் அதற்குரிய மதிப்பைப் பெருமலும் இருப்பதுமாகும்.