பக்கம்:பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 இழிவாகப் பேசினலும், பெண்களை இழிவாக நடத்தி லுைம் எரிமலையாக வெடித்துவிடுவார். அப்படி ஒரு நிகழ்ச்சி அடுத்து வருகின்றது. அதற்கு என்ன பதில் அளிக் கிருர் பாருங்கள்: துச்சாதனன் பாஞ்சாலியின் கூந்தலைப் பற்றிக் கொண்டு வீதி வழியே வருகின்றன். "என்ன கொடுமையிது என்று பார்த்திருந்தார் ஊரவர்தங் கீழ்மை உரைக்குந் தரமாமோ? வீரமிலா நாய்கள், விலங்காம் இளவரசன் தன்னை மிதித்துத் தராதலத்திற்.போக்கியே, பொன்னையவள் அந்தப் புரத்தினிலே சேர்க்காமல், நெட்டை மரங்களென நின்று புலம்பிஞர் பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ?" ஸபையில் நீதி கேட்டு அழுகின்ருள் பா ஞ் சா லி. அ த ற் கு வீட்டுமாசார்யன் பதில் சொல்கிருன்: "வேத முனிவர் விதிப்படி, நீசொல்வது நீதமெனக் கூடும; நெடுங்காலச் செய்தியது! ஆனெடுபெண் முற்றும் நிகரெனவே அந்நாளில் பேணிவந்தார் பின்னுளில் இஃது பெயர்ந்துபோய் இப்பொழுதை நூல்களினை யெண்ணுங்கால். ஆடவருக் கொப்பில்லை மாதர், ஒருவன்தன் தாரத்தை விற்றிடலாம்; தானமென வேற்றுவர்க்குத் தந்திடலாம் முற்றும் விலங்கு முறைமையன்றி வேறில்லை தன்னை யடிமையென விற்றபின் னுந்தருமன் நின்னை யடிமையெனக் கொள்வதற்கு நீதியுண்டு செல்லு நெறியறியார் செய்கையிங்கு பார்த்திடிலோ கல்லும் நடுங்கும், விலங்குகளும் கண்புதைக்கும் செய்கை அநீதியென்று தேர்ந்தாலும், சாத்திரந்தான் வைகும் நெறியும் வழக்கமுடிநீ கேட்பதல்ை ஆங்கவையும் நின்சார்பி லாகா வகையுரைத்தேன்.