பக்கம்:பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 கொண்டு உணர்ச்சிக்கு ஏற்றவாறு பயன்படுத்துகிருர், நம் மகாகவி சுப்பிரமணிய பாரதியார். இதை ஒன்றிரண்டு உதாரணங்களால் விளக்குவோம். எல்லாவற்றையும் குதில் வைத்துத் தருமன் இழந்து விடுகிருன். அப்பொழுது அவன் நாட்டை வைத்துச் சூதாடுமாறு சகுனி சொல்கிருன். அது கேட்டுக் கொதித் தெழுந்து விதுரன் தடுக்க முனைகிருன். அதல்ை சினம் பொங்கத் துரியோதனன் கூறுவதாக நொண்டி சிந்தை எவ்வாறு பாரதியார் கையாளுகின்ருர் என்பதைப் பாருங்கள்: "நன்றி கெட்ட விதுரா!-சிறிதும் நாண மற்ற விதுரா! தின்ற உப்பி னுக்கே-நாசந் தேடு கின்ற விதுரா! அன்று தொட்டு நீயும்-எங்கள் அழிவு நாடு கின்ருய், மன்றி லுன்னே வைத்தான்-எந்தை மதியை என்னு ரைப்பேன்! ஐவ ருக்கு நெஞ்சும்-எங்கள் அரமனைக்கு வயிறும் தெய்வ மன்று னக்கே-விதுரா! செய்து விட்ட தேயோ? மெய்வ குப்ப வன்போல்-பொதுவாம் விதிஉணர்ந்த வன்போல் ஐவர் பக்கம் நின்றே-எங்கள் அழிவு தேடு கின்ருய்" பாஞ்சாலி சூதில் வசமானதுபற் றிக் கெளரவர் கொண்ட மகிழ்ச்சியை எவ்வளவு அழகாகப் பின்வரும் அடிகளிலே தெரிவிக்கிருர், பாருங்கள்: