பக்கம்:பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 "திக்குக் குலுங்கிடவே-எழுந்தாடுமாம் தீயவர் கூட்ட மெல்லாம் தக்குத்தக் கென்றே அவர்-குதித்தாடுவார் தம்மிரு தோள்கொட்டுவார் ஒக்குந் தருமனுக்கே-இஃதென்பர், ஒ! ஓ! வென் றிரைந்திடுவார்; கக்கக்கென் றேநகைப்பார்-துரியோதன. கட்டிக்கொள் எம்மைஎன்பார். மாமனைத் துக்காயென்பார்-அந்தமாமன்மேல் மாலை பல வீசுவார் சேமத் திரவியங்கள்-பலநாடுகள் சேர்ந்ததி லொன்றுமில்லை; காமத் திரவியமாம்-இந்தப்பெண்ணையும் கைவச மாகச்செய்தான்; மாமனேர் தெய்வமென்பார்:-துரியோதனன் வாழ்கவென் ருர்த்திடுவார்." பாரதியார், "பாஞ்சாலி சபதம்’ என்னும் ஒரு பகுதியை வைத்துக்கொண்டு ஒர் அமர காவியத்தைப் படைத்திருக் கிரு.ர். வறுமையில் வாடினலும் அவர் புடம்போட்ட பொன்னகத் திகழும் ஒருமேதை என்பதை நாம் உணர்ந்து போற்றுகிருேம்.