பக்கம்:பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

viii 'எளிய பதங்களேக்கொண்டு, எளிய நடையில் காவியம் செய்து தருவோன் தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோளுகின்ருன்’ என்று பாரதியார் எழுதியிருக் கிருர். எளிய பதங்களைக்கொண்டு எளிய நடையில் உரைநடை இலக்கியம் செய்வோனும், தமிழுக்கு உயிர் தருவோளுகின்ருன். பாரதியார் இந்த இருபணிகளையும் நல்ல முறையிலே திறம்பட செய்திருக்கிருர் என்பதை அறியும்போதுதான் அவருடைய முழுப்பெருமையும் நமக்குத் தோன்றும். கவிதையை மட்டும் கவனித்தால் பாரதியார் தமிழுக்குச் செய்த சேவையை முழுமையாக அறிந்துகொள்ள இயலாது. சாதாரணமாக எந்த மொழியிலும் பேச்சு நடைக்கும், எழுத்து நடைக்கும் வித்தியாசமிருப்பதைக் காணலாம். ஆனல், இந்த வித்தியாசம் தமிழிலே மிகப்பெரிதாக அக் காலத்தில் இருந்தது. எழுத்துநடை பேச்சுநடையை ஒட்டியதாக இருக்கக்கூடாது என்றே படித்தவர்கள் எண்ணியிருந்தனர். டாக்டர் உ. வே. சாமிநாதய்யர் போன்ற மிகக் சிலர் துணிந்து, எளிய தமிழிலே எழுத முன்வந்தனர். ஆனல், கொச்சையல்லாத, பேச்சுநடைக்கு அதிகம் மாறு பட் டி ல் ல | த தமிழ்நடையிலே வலிமையோடும், அழகோடும், எண்ணத் தெளிவோடும் எழுதலாம் என்பதை நன்கு நிலைநாட்டியவர் பாரதியாரே ஆவார். தமிழருக்கு என்ற கட்டுரையை அவர் எப்படித் தொடங்குகிருர், பாருங்கள்:

தமிழா, தெய்வத்தை நம்பு. பயப்படாதே. உனக்கு நல்ல காலம் வருகின்றது.

'உனது ஜாதியிலே உயர்ந்த அறிஞர்கள் பிறந் திருக்கிருர்கள். தெய்வங்கண்ட கவிகள், அற்புதமான