பக்கம்:பாரதியின் இலக்கியப் பார்வை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியின்


வாயிலாகத் தம் திறமையையும் குழைத்துச் சில குறிகளால் தெளிவாக்கிவிட முயல்கிறார். இதனைப் பாரதி கண்டு கொள்கிறார். இதனையே,

“எல்லையொன் றின்மை எனும்பொரு ளதனைக்
கம்பன் குறிகளால் காட்டிட முயலும்
முயற்சி”

-என்று பாடுகிறார்.

மேலும், “கல்வியிற் பெரியன் கம்பன்” எனும் இலக்கண நூலின் மேற்கோள் தொடர் பாரதிக்கு நினைவில் நிற்கிறது. அந்நினைவைச் செந்தமிழ் நாட்டைப் பாடிப் பூரிக்கும் போது முன்னே இழுத்துத் தொடர்பு படுத்தி,

“கல்வி சிறந்த தமிழ் நாடு-புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ் நாடு”
-என்று பாடுகிறார்.

இவ்வாற்றான் கம்பரது இலக்கியத்தில் ‘கம்பரது உள்ளம் மனிதத் தன்மையைப் பதியவைக்கும் உணர்வில் ஆழ்ந்து கிடக்கிறது’ என்று பாரதி அறிவிக்கிறார்.

தெய்வ வள்ளுவன்.

இதுபோன்று திருவள்ளுவப் பெருந்தகையை அவர் காணும் முறையும் நோக்கற்பாலது. ‘திருக்குறளைச் செவியாரக் கேட்டு நல்லுணர்வும், நல்லறிவும் பெற்று வாழ்வைச் செம்மை செய்யவேண்டும்; அவ்வாறு செம்மை செய்யாதவர்

18