பக்கம்:பாரதியின் இலக்கியப் பார்வை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியின்




இவ்வடிப்படை உண்மையை உளத்துக்கொண்டு நோக்கின், பாரதியார் சொற்களை அமைத்ததன் தெளிவும் பொருட்பொலிவும் புரியும். இடைவெட்டெண்ணமும் சிறுகச் சிறுக மறைந்து அமைதி கிடைக்கும்.

இவ்வடிப்படையிலே - இவ்வமைதியிலே நின்றுதான் சிலப்பதிகாரத்திற்குப் பாரதியார் தந்துள்ள மணியான திறவுகோலை நோக்கவேண்டும்; நோக்குவோம்.

சிலப்பதிகாரத்திற்கு ‘நெஞ்சை அள்ளும்’ எனும் அடைமொழி கொடுத்தார். அதே மூச்சில் என்ன பாடினார்?

“சிலப்பதி காரம் என்றோர்
மணி ஆரம் படைத்த தமிழ்நாடு”

- என்று சிலப்பதிகாரத்தை ஒரு ‘மணி ஆரமாக’ உருவகித்துப் பாடினார். தமிழ்நாட்டிற்கு ஒரு ‘மணிமாலை’ சூட்டிப் பூரித்தார்.

சிலப்பதிகாரத்தை ஓர் அணிகலனாக உருவகம் செய்தவர் ஏன் மணி ஆரம் - மணிமாலை என்றார்? ஏன் பவளமாலை என்று பாடியிருக்கக் கூடாது? பொன்மாலை என்று பாடியிருக்கலாமே! மலர் மாலை என்று தொடுத்திருந்தால் மணக்காதா? செய்யுள் அமைதிக்கும் ஒத்திசைக்கும் வகையில்,

42